இந்தியாவின் முதல் முஸ்லிம் அல்லாத அரபுத்துறை பெண் பேராசிரியர்!.
திருவனந்தபுரம் குற்றிச்சல் பகுதியைச் சேர்ந்த சமுத்திரா ஜி.ஜே. திருவனந்தபுரம் கலைக் கல்லூரி, அரபுத்துறையில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.முதல் வகுப்பிலிருந்தே அரபு மொழியைக் கற்கத் தொடங்கிய சமுத்திரா, ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தாலும் அரபுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் திருவனந்தபுரம் பல்கலைக் கழக கல்லூரியில் அரபு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சில நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்கிறார்.
நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் திருவனந்தபுரம் கலைக் கல்லூரிக்கு (1924 - 2024) சமுத்திராவின் வருகை கூடுதல் சிறப்பு.இன்றைக்கு கேரளாவில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் அல்லாத மாணவர்கள் அரபு மொழியைக் கற்கிறார்கள். முஸ்லிம் மாணவர்கள் சமஸ்கிருதம் கற்கிறார்கள்.
மொழியில் அரசியலும் மதமும் கலப்படமாகும் காலச் சூழலில் இத்தகைய மாற்றம் சற்று ஆறுதல் அளிக்கிறது.வரலாற்றுச் சாதனைப் படைத்த சகோதரி சமுத்தரா ஜி.ஜே. வுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அரபுத்துறைச் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.
பேராசிரியர் அ. ஜாகிர் ஹுசைன்