For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியர் இலங்கைக்கு சென்று வர விசா தேவையில்லை !.

06:01 AM Aug 23, 2024 IST | admin
இந்தியர் இலங்கைக்கு  சென்று வர விசா தேவையில்லை
Advertisement

லங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் விளங்குகிறது. இங்கு வனவிலங்குகள் சரணாலயங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், உள்நாட்டு கலாசாரம் ஆகியவற்றைக் காண வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்.இலங்கையை பொறுத்தவரை பழம்பெரும் கோயில்கள், மக்களை கவரும் விதமான கடற்ரை போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விஷயமாக உள்ளது.சமீபத்திய ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகம் பேர் 2,46,922 பேர் வந்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் இருந்து 1,23,992 பேர் இலங்கை வந்துள்ளனர். இலங்கையில் ஏறத்தாழ இரண்டே கால் கோடி பேர் வசிக்கின்றனர். இந்த நாட்டின் பொருளாதாரம் கோவிட்டிற்கு பின்னர் பெரும் சரிவை சந்தித்தது. வரும் காலங்களில் இலங்கை பொருளாதாரம் மேம்படும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

Advertisement

2018 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது.

இதற்காக சுற்றுலாப் பயணிகள் மொத்தம் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளனர். அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த முறையானது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேசியா, ரஷியா, நியூசிலாந்து, ஓமன், கத்தார், தென் கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது வரை உலக அளவில் இந்தியர்கள் தாய்லாந்து, பூடான், மலேசியா, பிஜீ என 26 நாடுகளுக்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்ல முடியும். தற்போது இலங்கையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement