For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தாயகத்திற்கு பணம் அனுப்பதில் இந்தியர்கள் முதலிடம்!

09:16 PM May 10, 2024 IST | admin
தாயகத்திற்கு பணம் அனுப்பதில் இந்தியர்கள் முதலிடம்
Advertisement

வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள், தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணப்பரிமாற்றம் பற்றியான ஒரு அறிக்கையை ஆண்டுதோறும் ஐ.நா சபை வெளியிடுகிறது. உலக புலம் பெயர்வு அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தாண்டுக்கான அறிக்கையில், ‘தரவரிசையில் முதல் 5 இடங்களில் இந்தியா, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் இடம் பெற்றிருந்தாலும், மெக்சிகோ, சீனாவை முந்திக் கொண்டு தாய்நாட்டுக்கு அதிக அளவில் பணம் அனுப்பும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

வெளிநாட்டில் பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து, இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுப்பப்படும் பணப் பரிமாற்றமே ( migrant remittances ) ரெமிட்டன்ஸ் எனப்படும். தற்போதைக்கு அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ,என பல்வேறு நாடுகளில், கிட்டத்தட்ட ஒரு கோடியே 80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். இந்த வகையில், சர்வதேச அளவில் அயல்நாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Advertisement

இப்படி அயல் நாடுகளில் வசிக்கும் நபர்கள், தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணப்பரிமாற்றம் பற்றியான ஒரு அறிக்கையை ஆண்டுதோறும் ஐ.நா. சபை, உலக புலம் பெயர்வு அறிக்கை என வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கை கடந்த செவ்வாய் கிழமை வெளியானது. அதில் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இந்தியா, மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் இடம் பெற்றிருந்தாலும், மெக்சிகோ, சீனாவை முந்தி, தாய்நாட்டுக்கு அதிக அளவில் பணம் அனுப்பும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

சில பல ஆண்டுகளாகவே தாயகத்துக்குப் பணம் அனுப்புவதில், இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அந்த அறிக்கையின் படி , 2010 ஆம் ஆண்டில் 53.48 பில்லியன் டாலர்கள், 2015 ஆம் ஆண்டில் 68.91 பில்லியன் டாலர்கள், 2020 ஆம் ஆண்டில் 83.15 பில்லியன் டாலர்கள், இந்தியாவுக்கு migrant remittances மூலம் கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டில் 111.22 பில்லியனுடன் இந்தியா பணம் அனுப்புவதில் முன்னணியில் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக , மெக்ஸிகோ 61.1 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தையும் , சீனா 51 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தையும் , பிலிப்பைன்ஸ் 38.05 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தையும் , 30.04 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவைத் தவிர, ஆறாவது இடத்தில் பாகிஸ்தானும் மற்றும் எட்டாவது இடத்தில் பங்களாதேஷும் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புலம்பெயர்வு பணப் பரிமாற்றத்தின் தொகை, 2020 ஆம் ஆண்டு ,கோவிட் காலத்தில் குறைந்திருந்தாலும் பிறகு அதிகரிக்கத் தொடங்கியதாக புள்ளி விவரங்களுடன் காட்டும் உலக புலம்பெயர்வு அறிக்கை , இது வளர்ச்சியின் நல்ல அறிகுறி என்றும் தெரிவித்துள்ளது..

Tags :
Advertisement