தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆண்களை விட அதிக நேரம் உழைக்கும் இந்திய பெண்கள்!

12:56 PM Sep 30, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக மத்தியத் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். பெண்கள் பொதுவெளிக்கு வந்து பொறுப்புகளை ஏற்று நாட்டையே வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்த முன்னேற்றத்தை ‘அமைதிப் புரட்சி’ எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் முன்பைவிட அதிகமாக உழைப்பதாகவும் ஆண்களைக் காட்டிலும் நீண்ட நேரம் வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் வேலைக்குச் செல்வது அவர்களது பொருளாதார நிலையை உயர்த்தும் என்கிறபோதிலும் ஏற்கெனவே வீட்டு வேலைகளில் அதிக நேரத்தைச் செலவிடும் அவர்கள் தற்போது பணியிடங்களிலும் நீண்ட நேரம் வேலை செய்வதால் அவர்களது உடல், மன நலன் பாதிக்கப்படக்கூடும் எனப் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

Advertisement

இச்சூழலில் இந்தியாவில் இளம் பெண்கள் வாரந்தோறும் 55 மணிநேரம் வேலை செய்கிறார்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை- தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் வாரத்திற்கு சுமார் 56.5 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. உலகிலேயே நம் நாட்டில் தான் இந்தக் கொடுமை. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) தரவுகளின்படி, “தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம், பத்திரிகை துறை களில் பணியாற்றும் பெண்கள் வாரத்திற்கு சராசரி யாக 56.5 மணிநேரம் வேலை செய்கிறார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றினால் நாளொன்றுக்கு 11 மணி நேரமும். ஆறுநாட்கள் பணி யாற்றினால் தினமும் ஒன்பது மணி நேரத்திற்கு அதிகமாகவும் பணியாற்றுகின்றனர்.

இளம் பெண் தொழில் வல்லுநர்களின் நிலை மையோ பரிதாபமாக உள்ளது. தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஊடகப் பணிகளில் 15-24 வயது டைய பெண்கள் வாரந்தோறும் சராசரியாக 57 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் 55 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் உள்ள இந்தியப் பெண்கள் தான் உலக ளவில் மிக அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள். உதாரணமாக, ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை துறைகளில் உள்ள பெண்கள் வாரத்திற்கு சராசரியாக 32 மணிநேரம் வேலை செய்கிறார்கள், ரஷ்யாவில் உள்ள பெண்கள் 40 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதிக பணிச்சுமை இருந்தபோதிலும், இந்தியப் பெண்கள் இந்தத் துறைகளில் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வேலைகளில் 8.5 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். தகவல் தொடர்புத் துறையில் 20 சத வீதம் பேர் மட்டுமே பெண்கள்.

பல நாடுகளில் இந்தத் துறைகளில் பெண்கள் பெருமளவில் பணியாற்று கின்றனர். 145 நாடுகளில் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களை பிரதிநிதித்துவத்தில் இந்தியா 130-ஆவது இடத்தில் உள்ளது. மற்றொரு காரணி பணிக்குச் செல்லும் பெண்கள் அலுவலகம், வீடு இரண்டிலும் வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் வரையே ஓய்வு கிடைக்கிறது. பணிக்குச் செல்வதற்கு முன் ஊதியம் இல்லாத வேலையான வீட்டு வேலையில் ஐந்து மணி நேரம் முதல் ஆறு மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். எல்லா வீடுகளிலும் இந்த நிலையாக இருக்கிறது என சிலர் வியாக்கியானம் செய்யக்கூடும். இந்தியாவில் எடுக்கப்பட்ட தரவுகள் குடும்பப் பெண்களின் வாழ்நிலையோடு பொருந்துகிறது. பணிக்குச் செல்லும் பெண்களுடன் ஒப்பிட்டால் (ஐந்து மணி நேரம் முதல் எட்டு மணி நேரம்) வேலைக்குச் செல்லாத ஆண்கள் வீட்டு வேலைகளில் மிகக்குறைவான (மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம்) நேரத்தையே செலவிடு கிறார்கள்.

குறிப்பாக திருமணமாகி பணிக்குச் செல்லும் பெண் கள் எட்டு மணி நேரம் வீட்டு வேலையில் மூழ்கிவிடுகிறார்கள். திருமணமான ஆண்கள் அதிகபட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால் திருமணத்திற்குப் பின் பெண்களின் வேலை இரட்டிப்பாகிறது. ஆண்களின் வேலை குறைந்துவிடுகிறது. மேலும், வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தின் அளவு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. இதில் நகர்ப்புறம்-கிராமப்புறம் என்ற பாகுபாடு இல்லை. அனைத்து மாநிலங்களிலும், 85 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் வீட்டு வேலைகளிலும் அலு வலகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பெரும் பாலான மாநிலங்களில், வீட்டு வேலைகளில் ஈடுபடும் ஆண்களின் பங்கு 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஹரியானா, இராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் வீட்டு வேலை செய்யும் ஆண்களின் பங்கு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. “பெண்களின் கைகளில் தான் நாட்டின் முன்னேற்றம் உள்ளது. நாட்டின் புதல்விகள் தேசிய பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், ரஃபேல் விமானங்களை ஓட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களின் மரியாதை மற்றும் சமத்துவ உணர்வின் அளவை உயர்த்துவதன் மூலம் மட்டுமே இந்தியா முன்னேற முடியும். அனைத்து பெண் கள்-சகோதரிகள்-புதல்விகள் வழியில் வரும் அனைத்து தடைகளையும் நீக்கும் உறுதியுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” எனக் கூறியவர் வேறுயாருமல்ல, பிரதமர் மோடி தான் அவர். பெண்களுக்கு பொருளாதார வழி அதி காரமளித்தல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரையின் ஒரு சிறுபகுதியே இது. (2023 மார்ச் 10) பெண்களுக்கு அதிகாரமளிப்பது இருக்கட்டும். அவர்கள் எட்டு மணி நேரம் பணியாற்றுவதை முதலில் உறுதிப்படுத்துங்கள். வெறும் வெற்றுப் பேச்சுக்களால் எந்தப் பலனும் இல்லை.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Indianmore hours than men!womenWorkபெண்வேலைநேரம்
Advertisement
Next Article