’இந்திய வானிலைப் பெண்’ அன்னா மாணி
இந்தியாவின் வானிலைப் பெண்' என அறியப்படும் அன்னா மாணி 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இயற்பியலாளராகவும் வானிலை நிபுணராகவும் அவர் ஆற்றிய பணி இன்று துல்லியமாக வானிலையைக் கணிப்பதற்கு உதவுகிறது.அன்றைய மெட்ராஸின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அன்னா மாணி ஓராண்டு WCC கல்லூரியில் கற்பித்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை படிப்புக்கான உதவித்தொகை பெற்றார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின் கீழ் வைர மற்றும் மாணிக்கம் ஒளியியல் பண்புகள் குறித்த ஆராய்ந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபி படித்தார்.அன்றைய மெட்ராஸின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அன்னா மாணி ஓராண்டு WCC கல்லூரியில் கற்பித்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை படிப்புக்கான உதவித்தொகை பெற்றார்.நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின் கீழ் வைர மற்றும் மாணிக்கம் ஒளியியல் பண்புகள் குறித்த ஆராய்ந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபி படித்தார்.
ஏன் அவரை நினைவு கூற வேண்டும்?
படித்து முடித்து லண்டனிலேயே தங்கி வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தும் அதை உதறி தள்ளி தனது தாய்நாட்டிற்காக சேவை செய்ய வந்து விட்டார். இன்று நாம் பயன்படுத்தும் வானிலை முன்னறிவிப்பு உபகரணங்களிற்கெல்லாம் முன்னோடி இவர்தான். இந்தியாவிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வானிலை சார்ந்த உபகரணங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார் அன்னா.
1950இல் இந்தியாவில் சோலார் ரேடியேஷன் கண்காணிப்பு நிலையங்களின் நெட்ஒர்க்கை நிறுவியவர் இவர். மேலும் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் மூலங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அன்னா. அது குறித்து தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.அறிவியல் உணர்வு மட்டுமின்றி அவர் மிகுந்த நாட்டுப்பற்று மிக்கவரும் கூட. காந்திய மார்க்கத்தை கடைப்பிடித்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடைகளையே உடுத்தி வந்தார். மேலும் பல்வேறு சுதந்திர போராட்டங்களுக்கு ஆதரவாகவும் இருந்தார்.
அவர் வாங்கிய விருதுகள் மற்றும் வகித்த பொறுப்புகள்:
1987 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனராக பொறுப்பு வகித்தார்.
கே.ஆர்.ராமநாதன் விருது.
தேசிய அறிவியல் அகாடமி விருது.
மறைவு
வெறும் ஆராய்ச்சியாளர், நாட்டுப்பற்றாளராக மட்டுமின்றி அன்னா ஒரு சிறந்த பெண்ணியவதியாக வாழ்ந்துள்ளார். பகுத்தறிவு பேசும் அறிவியல் கூட ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிலவி வந்த காலத்திலேயே அதையெல்லாம் உடைத்து சாதித்து காட்டியவர் அன்னா. தன் வாழ்நாளின் இறுதி வரை நாட்டுக்காகவே வாழ்ந்து 2001 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட்16 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் உயிர் நீத்தார் அன்னா மணி.
நிலவளம் ரெங்கராஜன்