தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தியன் பேங்கில் ஆபிசர்ஸ் ஜாப் ரெடி!

09:57 AM Aug 14, 2024 IST | admin
Advertisement

ந்தியன் வங்கியில் காலியாக உள்ள பேங்க் ஆபிஸர்ஸ் ஜே.என்.ஜி ஸ்கேல்-1 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 காலி பணியிடங்கள் உள்ளன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கல்வி தகுதி என்ன?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

Advertisement

வயது வரம்பு

விண்ணப்பிக்க, 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகளும், PwBD (SC/ ST) 15 ஆண்டுகளும், PwBD (OBC) - 13 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி, மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://ibpsonline.ibps.in/iblbojul24/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விதிமுறைகள்!

* விண்ணப்பதாரர்கள் ஒரு மாநிலத்தின் காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதல் 12 ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் பணியமர்த்தப்படுவார்கள்.

* விண்ணப்பத்தாரர்கள் மாநிலத்தின் விரும்பிய உள்ளூர் மொழியில் படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதலில் திறமையானவராக இருக்க வேண்டும்.

Advertisement
Next Article