For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய விமானப்படை நாளின்று!

06:48 AM Oct 08, 2024 IST | admin
இந்திய விமானப்படை நாளின்று
Advertisement

ண்டு தோறும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியப் பாதுகாப்புப் படை அணியின் ஒரு முக்கிய அங்கமாக இந்திய விமானப் படை உள்ளது. இந்த படையானது 1932-இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில் உருவாக்கப்பட்டது.இந்திய விமானப்படைச் சட்டம் 1932- ன் படி இங்கிலாந்து ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடந்ததில்லை. இரண்டாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் இந்திய விமானப்படை பங்கேற்றது. இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறி வருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், ‘ராயல் இந்தியன் ஏர் போர்ஸ்’ என்ற பெயரை இந்திய விமானப் படைக்கு வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு ராயல் இந்திய விமானப்படையாக பெயர் மாற்றம் பெற்றது இந்திய விமானப்படை.ஆரம்பத்தில் இங்கிலாந்து படைகளின் சீருடை மற்றும் முத்திரைகளையே இந்திய விமான படையினரும் பயன்படுத்திவந்தனர்.

Advertisement

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய அரசுக்குக் கீழ் செயல்பட்டு வந்த விமானப்படை இந்திய அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. அப்போதும் `ராயல் இந்திய விமானப்படை' என்றே பெயர் பெற்றிருந்தது. 1950-ம் ஆண்டு, குடியரசு நாடாக மாறிய பின்னர் `ராயல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு `இந்திய விமானப்படை' என்று பெயர் மாற்றப்பட்டது. 1950-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் 4 போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் காக்டஸ், ஆபரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய வான்வெளி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளிலும் இந்திய விமானப்படை பங்கெடுத்திருக்கிறது. 1933ம் ஆண்டு முதல் இதுவரை இந்திய விமானப்படை விமானங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வட்ட வடிவ சின்னம் 4 முறை மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது தேசியக் கொடி வண்ணத்தில் வட்ட வடிவ சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் பாதுகாப்பு படைகளான இந்திய ஆர்மி, நேவல், ஏர் ஃபோர்ஸ் இவைகள் அனைத்துக்கும் தனித்தனி பெருமைகள் உள்ளன .

Advertisement

இந்நிலையில் நமது இந்திய விமானப்படை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்கள் சில

🛫இந்திய விமானப்படையின் மந்திர சொல்லான "டச் த ஸ்கை வித் குளோரி "என்ற குறிக்கோள் கொண்டது . பெருமையுடன் வானைத் தொடுதல் என்ற வாசகம் கொண்டு விண்ணில் பறக்கின்றது .

🛫உலகில் 4 வது பெரிய விமானப்படை இந்திய விமானப்படை ஆகும். போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என சுமார் 1,400 விமானங்கள் இந்திய விமானப்படையின் வசம் உள்ளன. 1,70,000-க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். ரஃபேல், மிராஜ் 2000, மிக் 21, மிக் 27, மிக் 29, ஜாகுவார், சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்கின்றன

🛫விமானப்படைக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் 60 தளங்கள் உள்ளன. இந்தியாவுக்கு வெளியில் தஜிகிஸ்தானில், இந்திய விமானப் படைக்கு ஒரு தளம் உள்ளது.உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே அமைந்துள்ள ஹிண்டன் விமானப்படை தளம் ஆசியாவிலே மிகப்பெரியது. இது 9000 அடி நீளம் மற்றும் 150 அடி அகல பரப்பளவு கொண்டது.

🛫இந்திய விமானப்படை அதிகளவில் பெண் போர் விமானிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. மேலும் ரஃபேல் போர் விமானத்திலும் போர் விமானியாக பெண் இருக்கிறார்.

🛫இந்திய ராணுவத்தில் பல்வேறு போர் நடவடிக்கைகளில் விமானப்படை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. உதாரணத்திற்கு இலங்கை - விடுதலை புலிகள் போரின் போது நடத்தப்பட்ட ”ஆப்ரேஷன் பூமாலை” , காஷ்மீர் சியாச்சின் பனிப்பாறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட “ஆப்ரேஷன் மேக்தூத்”, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ”கார்கில் போர்” ஆகியவற்றில் இந்திய விமானப்படையின் பங்கு மகத்தானது.

🛫வெள்ளம், சுனாமி, புயல், பனிச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மீட்புப்பணிகளில் விமானப்படை ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க போர் விமானம் பயன்படுத்தப்பட்டது.

🛫கடந்த 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியா மேற்கொண்ட போரினால் யேமனில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை “மிஷன் ராகாத்” எனும் நடவடிக்கை மூலம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படை பங்கு முக்கியமானது.

🛫விமானங்களுக்கு சிக்னல் அளிக்கும் உலகின் மிகவும் உயரமான கோபுரங்களில் ஒன்றை லடாக்கின் மலைச்சிகரத்தின் மீது இந்திய விமானப்படை அமைத்துள்ளது. அதி நவீன விமானங்களை இறக்குவதற்கும் ஹெலிகாப்டர்களை கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்த்துவதற்கும் இந்த சிக்னல் கோபுரங்கள் பயன்படும். லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி , புகுச்சி, நயோமா போன்ற பகுதிகளில் அசல் எல்லைக் கோட்டை சில நிமிடங்களில் எட்டும் வகையில் இந்திய விமானங்களும், அபெச்சி போன்ற ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன

🛫பாதுகாப்புப் பணிகள் மட்டுமின்றி, இயற்கை பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement