For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ்!

08:07 PM Jun 25, 2024 IST | admin
இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ்
Advertisement

பிரமாண்டம் என்ற அடைமொழியுடன் உலா வரும் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ‘இந்தியன்2’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 28 வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியானது. அப்போது, இந்தியன் தாத்தா கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசனை பார்த்தபோது எந்த மாதிரியான சிலிர்ப்பு இருந்ததோ அதே சிலிர்ப்பு இப்போதும் இருந்ததாக இயக்குநர் ஷங்கர் தெர்வித்து இருந்தார்.

Advertisement

இப்படம் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியன் 2 படத்திற்கான ட்ரைலர் இம்மாதம் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Advertisement

‘இந்தியன்2’ திரைக்கதையானது இப்போது நாட்டில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க இந்தியன் தாத்தா திரும்ப வந்தால் எப்படி இருக்கும் என்ற கருவை மையமாகக் கொண்டுதான் உருவாகி இருக்கிறது. ஆக்டர் சித்தார்த் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை ஊடகங்கள் மூலம் எடுத்து சொல்பவராக வருகிறார். இந்தக் கொடுமைகளை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தர் இருந்தார். அவர் மீண்டும் வர வேண்டும் என சேனாதிபதி இந்தியன் தாத்தா பற்றி டிரெய்லரில் கதை சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement