தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

08:30 PM Jul 24, 2024 IST | admin
Advertisement

டப்பு 2024 – 2025 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றில் அதிக முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கிய செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கும், ரயில்வே துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பட்ஜெட்டில் பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு எந்த ஒரு திட்டமும், நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement


மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நிதி ஒதுக்கீடு குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு காரணமாக உள்ள ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிக திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இந்த இரண்டு மாநிலங்களுக்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி எம்பிகள் அனைவரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் முடிவு செய்தனர். அதன்படி, மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி இந்தியாகூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

Tags :
DemonstrationIndia Alliance PartympParliament Complex!
Advertisement
Next Article