For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள்!

05:37 PM Aug 29, 2024 IST | admin
இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை  அதிகரிப்பு   ஆய்வு முடிவுகள்
Advertisement

ம் நாட்டில் பரவும் ‘‘தொற்றுநோய்” என்ற தலைப்பில் IC3 Movement அமைப்பால்  நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை மாநாடு ஒன்றில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையில், நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவிகிதம் அதிகரிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் கடந்தாண்டைவிட 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, தற்கொலை செய்து கொண்ட மொத்த மாணவர்களின் 53 சதவிகிதம் பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகளின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள்தொகையில் 24 வயதுக்கு குறைவானவர்கள் 58.2 கோடி பேர் இருந்த நிலையில், தற்போது, 58.1 கோடி பேர்தான் உள்ளனர். தற்கொலை எண்ணிக்கை 6,654இல் இருந்து 13,044ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆய்வில், மகாராஷ்டிரம், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசங்களில் அதிகளவிலான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மொத்த எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்கு இந்த மாநிலங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் 29 சதவிகிதம் பேர் தென் மாநிலங்களை சார்ந்தவர்கள்.மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவிதமும், மாணவிகளின் எண்ணிக்கை 61 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement