For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் 1950ஐ விட மோசமான நிலைக்கு போய்விட்ட வருமான சமத்துவமின்மை!

05:59 PM Jan 25, 2025 IST | admin
இந்தியாவில் 1950ஐ விட மோசமான நிலைக்கு போய்விட்ட வருமான சமத்துவமின்மை
Advertisement

ந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி (PRICE) மற்றும் நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் ஆகிய அமைப்புகள் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தன.அந்த ஆய்வின் முடிவில் நம் நாட்டில் எல்லோருக்கும் சமமான வருமானம் கிடைக்கப்படுவதில்லை என்பதும், இந்த நிலை முன்னெப்போதை விடவும் இப்போது மோசமடைந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக இந்த வருமான சமத்துவமின்மை (income inequality) கடந்த 1950ல் இருந்ததை விட தற்போது மோசமடைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

Advertisement

வருமான சமத்துவமின்மை புரிந்துக்கொள்வது மிகவும் எளிது. நீங்களும், நானும், நம்முடைய நண்பர்களும், உறவினர்களும் எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தது 9 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை வேலை செய்கிறோம். வங்கி ஊழியராக, அரசு ஊழியராக, பத்திரிகையாளராக, கூலி தொழிலாளியாக, ஒப்பந்த ஊழியராக, தனியார் ஊழியராக, சுய தொழில் செய்பவராக நம்மில் பலர் இருக்கிறோம். எல்லோரும் வேலை செய்யும் நேரம் ஒன்றுதான். ஆனால் ஏன் எல்லோருக்கும் ஊதியம் சமமாக வருவதில்லை? சிலருக்கு மாதம் ரூ.10,000 சம்பளம் வரலாம், சிலர் ரூ.35,000 சம்பளம் பெறலாம். இன்னும் சிலர் ரூ.50,000 வரை கூட சம்பாதிக்கலாம். இந்த சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனையில்லை. இதெல்லாம் ரொம்ப சிறுசு. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவருக்கு மட்டும் என்ன 4 கைகள், 8 கால்களா இருக்கிறது? இதைத்தான் வருமான சமத்துவமின்மை என்று அழைக்கிறோம்.

Advertisement

இதனால் சிலர் தேவையை விட அதிகமாகவும், பலருக்கு அன்றாட தேவைகளுக்கு கூட போதுமானதாகவும் வருமானம் கிடைக்காததால் வறுமை அதிகரிக்கிறது. வறுமைகள்தான் குற்றங்களை உருவாக்குகிறது. வறுமைதான் வன்முறையை உருவாக்குகிறது, ஆரோக்கியமற்ற போட்டியும், பொறாமையும் இப்படித்தான் பிறக்கிறது.நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள போதுமான பணம் கிடைப்பதில்லை, படிக்க பணம் இல்லை, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு பணம் இல்லை. இது எல்லாத்துக்கும் வருமான சமத்துவமின்மைதான் காரணம்.

நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் மற்றும் PRICE ஆகிய சிந்தனைக் குழுக்களால் நடத்தப்பட்ட குடும்ப வருமான ஆய்வுகளின் தரவைப் பயன்படுத்தி, இந்திய வருமான சமத்துவமின்மை மீதான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வருமான சமத்துவமின்மையின் புள்ளிவிவர அளவீடுகளை கூறும் ‘ஜினி குறியீடு’ (Gini Coefficient), 2023-ம் ஆண்டில் 0.410 ஆகவும், இதே குறியீடு 1955-ம் ஆண்டில் 0.371 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த Gini ratio குறியீட்டின்படி '0' இருந்தால், எல்லோருக்கும் சமமான வருமானம் கிடைக்கிறது என்று அர்த்தம். இதுவே '1' என இருந்தால், யாருக்குமே சரியான சமமான வருமானம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். அதாவது வருமான சமத்துவமின்மை உச்சத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

இந்திய கிராமப்புறங்களில், ஜினி குறியீடு 2023-ல் 0.405 ஆகவும், 1955-ல் 0.341 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.“கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில், சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சிப் பலன்கள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யலாம்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட அடிமட்ட 10 சதவீத குடும்பங்களின் வருமானத்தின் பங்கு கடந்த 1955-ல் 3 சதவீதமாக இருந்த நிலையில், அது 2023-ல் 2.38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அதே நேரம் நாட்டின் அடிமட்ட 50 சதவீத குடும்பங்களின் வருமானத்தின் பங்கு, 22 சதவீதத்தில் இருந்து 22.82 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது.“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களால் அடிமட்ட 50 சதவீதத்தினரின் வருமானப் பங்கில் சிறிதளவு உயர்வுக்கு வழிவகுத்துள்ளன” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இப்பிரச்சனையை சரி செய்ய மக்கள் கைகளில் பண புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கிராமபுறங்களில் இதை செய்ய வேண்டும். பணம் இருந்தால் மக்கள் பொருட்களை வாங்குவார்கள். பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும், இது வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால் பொருளாதாரம் உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நடக்குமா என்ன?

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement