தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நியூசிலாந்தில் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து!

09:01 PM Nov 28, 2023 IST | admin
Advertisement

நியூசிலாந்தில் முந்தைய அரசு தன் நாட்டில் புகைப்பழக்கம் இல்லாத இளம் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த யாருக்கும் புகையிலை வாங்கும் உரிமை இருக்காது என்றும் அவர்கள் புகைப்பது சட்டப்படி குற்றம் ஆகும் என்றும் சட்டம் கொண்டு வந்தது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியுசிலாந்து தான்!. மேலும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள புகையிலைக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் புதிதாக பதவியேற்ற பிரதமர் நியூசிலாந்து நாட்டில் புத்தகத்தைப்பிடித்தலுக்கு எதிரான சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார் .

Advertisement

கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட, கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களைப் பெற்றது. பிறகு தேசிய கட்சி 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு முந்தைய ஆட்சியில் நியூசிலாந்தில் 2008க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதைத் தடை செய்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது.. இதை பொதுச் சுகாதார நிபுணர்கள் மற்றும் புத்தகத்தைப்பிடித்தலுக்கு எதிரான அமைப்புகள் பாராட்டினார்கள்.

Advertisement

இந்நிலையில் நேற்று கூட்டணிக் கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுப் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இக்கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். பிரதமர் லக்சன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளதாக கூறினார். அத்துடன் முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதை அடுத்து நிபுணர்கள் புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குவது, பொதுச் சுகாதாரத்தைப் பாதிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடித்தல் எதிர்ப்பு அமைப்பான ஹெல்த் கோலிஷன் அடோடேரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு கொள்கை முடிவில் இருந்து பின்வாங்குவது நாட்டிற்கே அவமானம். இது பொது சுகாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். மக்களின் உயிரிழப்புகளால் அந்த தொழிலின் லாபம் அதிகரிக்கும். சிகரெட் மீதான தடையானது சட்டவிரோத விற்பனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும், பெரும்பாலும் வரி விதிக்கப்படாமல் புழக்கத்தில் இருக்கும்`` என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
generational smoking bannew zealandPM Jacinda Ardernscrap
Advertisement
Next Article