மாலத்தீவு மக்கள் மாறாவிட்டால், அத்தீவிற்கு கடைசி மாலை மரியாதைதான்!
மாலத்தீவு என்பது மாலைகள் போன்ற தீவுகள் என்பதால் வந்த மாலைத்தீவு என்ற தமிழ் சொல்லின் அடிப்படையில் வந்த பெயர் என்பதில் இருந்து, அதன் ஆரம்பம் என்ன என்பது புரியும். முன்பு குமரிக்கண்டம் என்பதன் மீதமிருப்பது இந்த மாலத்தீவுகள், மடகாஸ்கர் போன்றவையே! இந்த தீவு முதலில் நம் சோழர்கள் கீழ் தொடங்கி, சிங்களவர்கள், டச்சு, போர்ச்சுகீசியர், பிரிடிஷ் என்று பலரின் கீழ் இருந்து 1965 ஆண்டு விடுதலை பெற்றது. ஆனாலும் 11 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாமியர்களின் ஆதிக்கம் தொடங்கிய, பின்பு அந்த நாடு முழுவதுமாக இஸ்லாமிய நாடாக மாறியது. அங்கே 95% மக்கள் சுன்னி பிரிவினர். அதனால் அவர்களின் மீது சவூதி மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இன்று ஜிகாதிகளை அனுப்பும் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று என்றளவிற்கு மத தீவிரவாதம் வேறூன்றி வளர்ந்துவிட்டது. அதனால் இந்தியா, பாகிஸ்தான் பிரிந்தபோது மத ரீதியாக இந்திய எதிர்ப்பு நிலை தோன்றியது.
ஆனால் அந்த நாட்டில் அடிப்படை தேவைகளில் பலவும் இந்தியாவால் செய்யப்படுவதால், இந்தியாவின் உதவி இல்லாமல் வாழமுடியாது என்று நம்பும் மக்கள் ஒரு புறம், தீவிரமாக இந்தியாவை எதிர்க்கும் மத கும்பல் மறுபக்கம் என்பதால், அங்கே ஒவ்வொரு தேர்தலில் மாற்றம் வரும்போது, அதன் நிலைப்பாடுகளில் ஒட்டுமொத்த மாறுதலும் வரும். அந்த மக்கள் பெரும்பாலும் தமிழர்களை பூர்வீகமாக கொண்ட்வர்களில் தொடங்கி, பின்பு சிங்களர்கள், இந்தோநேஷியா, மடகாஸ்கர், அரேபியா என்று பல கலப்புகள் அங்கே உண்டு. அவர்கள் பேசும் மொழி இந்திய, அரேபிய மொழிகளின் கலப்பு. அதாவது, ஒரு காலத்தில் தமிழர்கள், இன்று முற்றிலும் மாறியது, காரணம் மதம் என்றே சொல்லலாம்.
மொத்தம் 1192 தீவுகள் கொண்ட இந்த தீவில், 200 ல் மட்டுமே கிட்டத்தட்ட 3.25 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அதில் மாலே என்பது பெரிய தீவு. அதன் தலைநகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியால் ஆளப்படுகிறது. அவர்தான் மற்ற தீவுகளின் ஆட்சியாளரை நியமிப்பார். அவர்களுக்கு பெரிய மருத்துவமனை கூட கிடையாது. எனவே அரசாள்பவர்கள், பணக்கரர்களுக்கு ஏதாவது சீரியஸான மெடிகள் எமெர்ஜென்ஸி என்றால் அவர்கள் கொச்சி அல்லது திருவனந்தபுரம் தான் வரவேண்டும், அதுவும் இந்திய கடற்படையின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம்தான் என்றளவிற்கு அவர்கள் உணவு முதல் பல விஷயங்களுக்கு இந்தியாவை சார்ந்து இருக்கிறார்கள். அங்கே குடிநீர் இல்லை, என்பதால் கடல்நீரை சுத்திகரித்துத்தான் பயன்படுத்துகிறார்கள், அதையும் செய்து கொடுத்தது இந்தியாதான். ஒரு முறை அவர்களுக்கு இந்த குடிநீர் சுத்திகரிப்பு முற்றிலும் செயலிழந்தபோது, இந்திய விமானப்படை மூலம் தண்ணீர் கொண்டுசென்று கொடுத்தார்கள். அவர்களுக்கு சாதாரண காலத்தில் மருந்து மாத்திரை முதல், கொரானா காலத்தில் நம் அரசு முன்னுரமை கொடுத்து அவர்களுக்கு உதவியது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்களர்கள் படை அதை கைப்பற்றியபோது, இந்திய கப்பற்படை சென்று அவர்களின் ஆட்சியை காப்பாற்றியது.
அது மட்டுமல்ல, அவர்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் என்றாலும், சுற்றுலா மூலமே அவர்களுக்கு முக்கிய வருமானம் என்பதால், உலகில் பல நாடுகள் அதன் ரம்மியத்தை ரசிப்பதற்காக வருகிறார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள். சுற்றுலா வரவேண்டும் என்றால் மது, மாது இத்தியாதிகள் இருக்க வேண்டுமல்லவா? எப்படி ஒரு இஸ்லாமிய நாட்டில் அதை அனுமதிக்கிறார்கள்? அந்த நாட்டின் தலைத்தீவான மாலேயில் மதுவிற்கு அனுமதியில்லை. ஆனால் மற்ற தீவுகளில் அனுமதி உண்டு. அங்கே பல நாட்டு மதுவும், பெண்களும் கிடைக்கும் என்பதால் அங்கே அரேபிய ஷேக்குகளின் சின்ன வீடாகவே அந்த தீவுகள் மாறிவிட்டது.
அரேபிய ஷேக்குகளுக்கு பிடித்தது இந்திய சினிமா உலகம். அதனால் இங்கே இருந்து செல்லும் நடிகைகளுக்கு அங்கே எல்லாம் இலவசம் என்பது அங்கே எழுதப்படாத சட்டம் என்பதால், அதன் பின்னால் இருக்கும் ரகசியங்களை தனியாக எழுதவேண்டுமா? ஆனால் அதற்கு அவர்கள் வைத்துள்ள வர்த்தக பெயர், மாலத்தீவின் அம்பாஸிடர்கள்?!?
தாய்லாந்து, இந்தோனஷியா, மாலே போன்ற சுற்றுலா தளங்களில் மதுவும், மாதுவும் அனுமதிக்கப்பட்டது என்பதால் அங்கே கூட்டம் கூடுகிறது. ஆனால் அதேபோல அழகான நம் லட்சத்தீவுகளில், நாம் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அனுமதிக்காததால், இங்கே அதிக டூரிஸ்ட்கள் வருவதில்லை. இப்போது லட்சத்தீவும் அழகாக இருந்தாலும், மாலத்தீவிற்கான கூட்டத்திற்கு காரணம் புரிகிறதா?
சரி இத்தனை செய்தும் அவர்கள் ஏன் இந்தியாவிற்கு எதிராக திரும்பினார்கள்?
இந்த நாடு இந்திய பெருங்கடலின் Trade Route என்ற மிகமுக்கிய Nerve Centres என்பதால், அதன் முக்கியத்துவம் மிக அதிகம். அதனால் இந்தியா அங்கே கப்பற்படை தளம் முதல், விமான நிலையம் போன்ற பலவற்றை அமைத்து கொடுத்துள்ளது. அங்கே நமது கப்பற்படையும் உள்ளது. அந்த முக்கியத்துவத்தால், இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவை கட்டுப்படுத்தவும், சீனாவின் 70% கடல் வாணிபம் இந்த வழியாக நடப்பதால், சீனாவிற்கு இந்தியா அங்கே இருப்பது பெரிய பிரச்சினை மட்டுமல்ல, அது அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. மேலும் இந்தியாவை சுற்றி வளைக்க அது பங்களாதேஷ், பர்மா, ஸ்ரீலங்கா, மாலத்தீவு, மடகாஸ்கர் என்று முற்றிலும் தன் வசப்படுத்துவதன் மூலம் இந்திய பெருங்கடலை தான் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறது. அது அமெரிக்காவை மீறி வல்லரசாக வேண்டும் என்றால், முதலில் இந்தியாவை மீறி அதன் ஆதிக்கத்தை இந்திய பெருங்கடலில் நிரூபித்தாக வேண்டும்.
அது எப்படி?
உலகில் சோழ அரசர்கள் முதல் இன்று உலகை ஆளும் அமெரிக்கா வரை உலகை ஆள காரணம் அதன் வலுவான கடற்படை. அதனால்தான் அமெரிக்காவிடம் மிதக்கும் தீவுகள் என்று சொல்லப்படும் விமானந்தாங்கி கப்பல்கள் பல உலகெங்கும் உண்டு. என்னதான் மிதக்கும் தீவுகள் இருந்தாலும், அதற்கு இதுபோன்ற தீவுகள் தேவை. அது ஓய்வெடுக்க, உணவு பொருட்கள் முதல், எரிபொருள் நிரப்புவது வரை அவசியம்.அதனால், மாலத்தீவு சீனாவிற்கு தேவைப்படுகிறது. அதற்காக வழக்கம்போல அது சில இலவசம், அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மற்றும் கடன் உதவிகளை செய்கிறது. எனவே இன்று மாலத்தீவிற்கும் சீனாவின் உதவி தேவைப்படுகிறது. அதாவது அங்கே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இலங்கையில் கொடுத்தது போல லஞ்சமாக கொட்டி கொடுக்கிறது.
அதனால் அவர்கள் மக்களிடம் இந்திய வெறுப்பு பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு மதம் மிகவும் உதவுகிறது. தமிழகத்தில் எப்படி இந்திய தேசிய எதிர்ப்பு திராவிடம் என்ற பெயரில் நடப்பதுபோலத்தான். அங்கே மக்கள் ஒரு பிரிவினர் தீவிர இஸ்லாமிய மத வெறியர்கள், மறுபக்கம் மாடரேட்டர்கள். இரண்டாம் வகை மக்கள் இந்தியாவை ஆதரிக்கிறார்கள். ஆனால் இதற்கு இடைப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் நடு நிலையாளர்கள் மாறும்போது ஆட்சி மாறும். சென்ற முறை இந்தியாவிற்கு ஆதரவாக இருந்த ஜனாதிபதி மாலத்தீவை இந்திய கடற்படையிடம் அடகு வைத்துவிட்டார், எனவே இந்திய கடற்படை வெளியேற வேண்டும் என்று வெறுப்பு பிரச்சாரம் செய்துதான் ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இதை நன்கு உணர்ந்த இந்திய அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்கு மாற்றாக இலட்சத்தீவை மட்டுமல்ல, அந்தமான் தீவையும் பெரும் சுற்றுலா தளமாக மாற்றுகிறது. அந்தமானில் நாம் Transport Hub மட்டுமல்ல சிங்கப்பூருக்கு இணையான சுற்றுலா தளமாக அதை கட்டமைக்கிறது. அதுபோல லட்சத்தீவில் இதுவரை நமக்கு விமானத்தளம் இல்லை. அங்கே இப்போது கடற்படை தளமும் அமைக்கிறது. இந்த சூழலில் சீனா ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தீவிர மதவாதியான மிசோ, இந்திய கப்பற்படையை வெளியேறச்சொல்லி மக்கள் மூலம் போராட்டத்தை முன்னெடுக்கிறார். என்னதான் மக்கள் மூலம் செய்தாலும், அந்த நாட்டிற்க்கு இருக்கும் சில பாதுகாப்பு விமானமே இந்தியா இலவசமாக கொடுத்தது என்பதால், அதற்கு அதனால் முடியாததால், இந்திய கப்பற்படையை வெளியேற்ற சீனாவின் கப்பல்படை உதவியை நாடுகிறார்.
அப்படியெனில் அதை இந்தியா மாலத்தீவின் மீது போர் தொடுத்து கைப்பற்றலாம், ஆனால் அது நம் கொள்கைக்கு எதிரானது, தவறு என்பதால் இந்தியா மாற்று முடிவாக, அதன் முக்கிய வருமானமான சுற்றுலாவை நசுக்கினால் அடங்கிவிடுவார்கள் என்பதால், இந்திய பிரதமர், லட்சத்தீவுகளில் ப்ரமோட் செய்ய அங்கே சென்றார். அங்கே அவரின் சுற்றுலா சம்பந்தப்பட்ட படங்களை வெளியிட்டார். அவற்றை உலகம் முழுவதும் 10 கோடிக்கு மேற்பட்டோர் பார்த்தார்கள். இதை புரிந்துகொண்ட மாலத்தீவு, இதற்கு மாற்றாக சீனாவிடம் ஆலோசனை கேட்டது. அதுபற்றி பேச மீசோ சீனா செல்ல திட்டமிட்டார். அப்படி செல்லும்போது, இந்தியாவிற்கு எதிரான சில வெறுப்பு நடவடிக்கைகள் எடுத்தால், சீன அவர்களை மெச்சி ராஜபக்ஷேவிற்கு கொடுத்ததுபோல தனக்கும் கொடுக்கும் என்பதால், ஏற்கனவே இருந்த மோடி, இந்திய எதிர்ப்பை காட்ட, அவர்களின் சில அமைச்சர்கள் மூலம், மோடி ஒரு கோமாளி என்றும், இந்தியர்கள் அழுக்கானவர்கள் என்றும், லட்சத்தீவு ஒருபோதும் மாலத்தீவிற்கு போட்டியாக உயர முடியாது என்றும் ட்வீட் செய்தார்கள்.
ஆனால் அதை மோடி அரசு லாவகமாக பயன்படுத்தியது. மாலத்தீவின் நிலைப்பாட்டிற்கு இந்தியர்களிடம் எதிர்ப்பு மிகக்கடுமையாக வந்தது. அதன் விளைவாக அந்த மூன்று அமைச்சர்களை பதவி நீக்கம் எல்லாம் செய்து பார்த்தார். ஆனாலும் எதிர்ப்பு நின்றபாடில்லை. அதன் சுற்றுலா படுத்தேவிடும் என்ற சூழல். வேறு வழியில்லாமல் மீசோ சீனாவிற்கு அவசராமாக செல்ல வேண்டியாகிவிட்டது. ஒரு பக்கம் மோடியின் லட்சத்தீவு படம் உலகம் முழுவதும் வைரலாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியாவை பற்றி பேசியது கடும் கோபத்தை கிளப்ப, கிட்ட்டத்தட்ட 12000+ இந்திய சுற்றுலா பயணிகளின் மாலே ஹோட்டல் புக்கிங்களை கேன்சல் செய்கிறார்கள். அதில் டெண்டுல்கர் முதல், நடிகைகள் வரை தங்கள் டிரிப்களை கேன்செல் செய்து, அதை வளைதளத்தில் பகிர்கிறார்கள். அதனால் மற்றவர்களும் அதை செய்தால்தான் தங்கள் நாட்டுப்பற்று வெளிப்படும் என்ற செய்ய வேண்டிய கட்டாயத்திற்கே நிலைமை சென்றுவிடுகிறது.
மாலேயிற்கு உலகத்தில் இருந்த வரும் விமானங்கள் பலவும், இந்தியாவில் ஒரு Stop Over மூலம் அங்கே செல்லும் என்றால் இந்தியாவின் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்கள் அறியமுடியும். இப்போது இந்தியர்கள் கேன்சல் செய்ய பல விமானங்கள் தங்கள் சேவையை மாலேவிற்கு நிறுத்த வேண்டிய சூழலுக்கு உள்ளானது. அப்படியென்றால், மாலத்தீவிற்கு சோறு கூட கிடைக்காது. என்னதாம் சீனா அவர்களுக்கு உதவினாலும், தண்ணீர் முதல், மக்கள் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டால், அவர்கள் அரசுக்கு எதிராக கொதித்தெழுவார்கள் அல்லவா? இப்போது மோடியை, அஜித் தோவாலை, நம்ம வாத்தி ஜெய்ஷங்கரை புரிந்துகொள்ள முடிகிறதா?
அதாவது, கத்தியின்றி, ரத்தமின்றி பாகிஸ்தான் முதல் மாலே வரை நம்மால் அவர்களை காலடியில் வீழ்த்த முடியும் என்றால் ஏன் சீனாவை வீழ்த்த முடியாது? அந்த இப்போது சீனா ஏன் இந்தியவிடம், மோடியிடம் பயப்படுகிறது என்பது புரிகிறதா?
புதியதாக கட்டப்படும் நம் கப்பற்தளமும், விமான நிலையமும் லட்சத்தீவை பெரிய சுற்றுலா தளமாக மாற்ற, மறுபக்கம் இந்த மாலே எதிர்ப்பும் இந்திய தேச பக்தியும் உதவும்போது யார் தடுப்பார்? ஆனால் இந்தியாவால் செய்ய முடியாத ஒரு விஷயம, அந்த சுற்றுலா நாடுகளில், விபச்சாரம் அனுமதிக்கப்படுகிறது. அதை அரசு சட்டப்படியாக அனுமதிக்காது. அதனால் நமது சுற்றுலா என்பது அரேபிய ஷேக்குகளையும், ஆண்களையும் ஆசை காட்டி ஒருபோதும் இழுக்க முடியாது.
🔥 அதை இந்திய அரசு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
🔥 பெண்களே, உங்கள் கணவர் இதுபோன்ற நாடுகளுக்கு சுற்றுலா போக அனுமதிப்பீர்களா?
மாலத்தீவு மக்கள் மாறாவிட்டால், மாலத்தீவிற்கு கடைசி மாலை மரியாதையை செய்வோம்!
🐶