ரொம்ப கடுப்பா இருந்தா, சும்மா உக்காறாதீங்க!
இன்னிக்கு உலகத்திலேயே அதிக அளவு எல்லோரும் சாப்பிடற ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ்.... உலகளவில் 30 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சந்தைய வச்சு இருக்கு.Lays கம்பனிக்காரன் ஒரு வருஷத்துல அமெரிக்கால மட்டும் 372 மில்லியன் பாக்கெட் வித்து இருக்கோம்ன்னு போன வாரம் கணக்கு குடுத்து இருக்கான், உலகம் பூரா எவ்வளவுன்னு சொல்லல. சும்மாவா பில் கேட்ஸ் 14000 ஏக்கர்ல உருளைக்கிழங்கு விவசாயம் பண்றார்.இப்படி பில்லியன் டாலர்ல பணம் கொட்டும், உலகமே தின்னு தீக்கிற உருளைக்கிழங்கு சிப்ஸ செம்ம கடுப்புல ஒரு ஆள் கண்டுபிடிச்சான்னு உங்களுக்கு தெரியுமா ?
1853ல நியூ யார்க் நகரத்தில் இருந்த மூன் லேக் ஹவுஸ் அப்படிங்கற ரெஸ்டாரன்ட்ல வேலை செஞ்ச ஜார்ஜ் கிரம்ன்ற ஒரு கறுப்பின செஃப்தான் இதை கண்டுபுடிச்சது, அதுவும் செம்ம கடுப்புல.ஒரு நாள் ராத்திரி இவர் ரெஸ்டாரன்ட்ல இவருக்கு வந்த ஒரு ஃப்ரெஞ்ச் பிரைஸ் ஆர்டர செஞ்சு அனுப்ப, மொறு மொறுன்னு இல்லைன்னு அதை கஸ்டமர் திருப்பி அனுப்ப, இவர் மறுபடியும் செஞ்சு அனுப்ப, அந்த ஆள் ரொம்ப மொந்தமா இருக்கு செல்லாது செல்லாதுன்னு மறுபடியும் திருப்பி அனுப்ப, இன்னொரு தடவை மறுபடியும் மொறு மொறுன்னு இல்லைன்னு சொல்ல, இப்படியே 4 தடவை திரும்ப வந்திருச்சு.
செம்ம காண்டுல, இதுக்கு மேல எப்படி திருப்பி அனுப்புவேன்னு பாக்கரேன்னு உருளைக்கிழங்க முடிஞ்ச அளவுக்கு சன்னமா வெட்டி தூக்கி எண்ணெயில் எரிஞ்சிட்டார், கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து ஒன்ன சாப்பிட அட்டகாசமா, சும்மா மொறு மொறுன்னு ஒரு ஐட்டம், மேல லேசா உப்பு தூவி அனுப்பி வைக்க, என்னையா இப்படி புது விதமா ஒரு டேஸ்ட்ன்னு ஒரே அடிதடி, இதுக்கு என்ன பேர்ன்னு எல்லோரும் கேக்க, அந்த ரெஸ்டாரன்ட் இருந்த ஊர் பேரயே வச்சு Saratoga Chipsன்னு சொல்லி விக்க ஆரம்பிச்சுட்டார்.
அன்னிக்கு கடுப்புல அந்த ஆள் செஞ்ச வேலை, இன்னிக்கு உலகத்துக்கே ஒரு சூப்பர் சைட் டிஷ் கிடைச்சு இருக்கு.என்னைக்காவது ரொம்ப கடுப்பா இருந்தா, சும்மா உக்காறாதீங்க, எதாவது வேலை செய்ங்க, எவன் கன்டா, நீங்களும் உலக அளவுல ஃபேமஸ் ஆகற அளவுக்கு எதாவது கண்டுபுடிச்சாலும் கண்டுபிடிக்கலாம்.