For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியா PoK ஐ கைப்பற்றினால் பாக், சீனாவுடன் போர் வருமா?

08:25 AM Jun 14, 2024 IST | admin
இந்தியா pok ஐ கைப்பற்றினால் பாக்  சீனாவுடன் போர் வருமா
xr:d:DAFYjkW8fi4:7,j:45794660820,t:23012507
Advertisement

மீபத்தில் PoK இந்தியா கைப்பற்ற அமெரிக்கா கூட ஆதரவு தெரிவித்தது. உடனே அமெரிக்காவே சொல்லிடுச்சு, நாம தூக்கிடுவோம்னு இந்திய ராணுவத்தை அனுப்பிடும்னு நாம நினைச்சா, இந்தியாவின் சாணக்கியத்தனம் நமக்கு புரியலைன்னு அர்த்தம். ஏனென்றால், இந்தியா அமெரிக்க எலி ஏன் எட்டு முள வேஷ்டி கட்டிக்கிட்டு போகுதுன்னு கூர்ந்து க(வ)னிக்கும் திறன் கொண்டது. இன்றைய சூழலில் எந்த பெரிய நாடும் நேருக்கு நேர் மோதுவது என்று சாத்தியமில்லாததது. அதை செய்தால் தாக்கப்படும் நாடு மட்டும்மல்ல, தாக்கிய நாடும் அழிந்துவிடும். அதை பல உதார்ணங்களில் பார்க்கலாம். அமெரிக்கா தாக்கிய ஈரான், ஈராக், லிபியா என்று எல்லாம் சின்னச்சின்ன நாடுகள், அவற்றால் அமெரிக்காவை திருப்பி தாக்க முடியாதவை.

Advertisement

இன்று உக்ரைனுக்காக உயிரை கொடுப்போம்னு சொல்ற அமெரிக்கா, தனது நேட்டோ நாடுகளோட ரஷ்யாவுடன் ஏன் நேரடியாக மோதவில்லை? ரஷ்யாவிடம் 6500 அணு ஆய்தங்களும், அதை ஏவக்கூடிய, ஏவினால் தடுக்க முடியாத ராக்கெட்டுகளும் இருக்கிறது என்பதால். அதனால், அது உக்ரைன் என்ற புள்ள பூச்சியை தூண்டிவிட்டு, மறைமுகமாக ரஷ்யாவை போரில் வீழ்த்த நினைக்கவில்லை, ஆனால் நீண்ட நாள் போரின் மூலம் பொருளாதாரத்தில் வீழ்த்த முயற்சித்தது. ஆனால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி அதன் கனவில் மண்ணை போட்டுவிட்டது. அதேபோல சீனா என்ற நாடு இன்று அடுத்த வல்லரசு நான்தான் என்கிறது. எண்ணிக்கையில் சீனா அமெரிக்காவிற்கு இணையாக ஆயுதங்களை கொண்டிருந்தாலும், அதன் ஆயுத வலிமை நிரூபிக்கபடாத சீன குவாலிட்டியுடன் உள்ளது. ஆம் அதன் போர் விமானங்கள் முதல் புல்லட்கள்வரை எதுவும் இதுவரை எந்த போரிலும் நிரூபிக்கபடாதது.

Advertisement

ஆம், ஒரு போரில், மிகப்பெரிய மாடர்ன் எலெக்ட்ரானிக் ஆயுதங்கள் மட்டும் போரை வெல்லாது. அதன் வீரர்களின் அறிவு அதில் மிக முக்கியம். அதன் அறிவுக்கு அனுபவம் மிக மிக அவசியம். ஆம், பாகிஸ்தானிடம் F16 போர் விமானம் நவீனமானது. ஆனால் அதை நமது மிகப்பழைய மிக் 21 ல் டாக் ஃபைட்டின் மூலம் சுட்டு வீழ்த்திய அபிநந்தன் ஞாபகம் இருக்கிறதா? உண்மையில் பாகிஸ்தானின் பேர் விமானிகளுக்கும் சீனாவின் போர் விமானிகளைவிட அனுபவம் அதிகம். ஆனால் சீன விமானிகள் பெப்பறப்பே! இதுவெல்லாம் இருந்தாலும், அமெரிக்கா சீனாவை எதிர்க்க துணிவில்லை. ஏனெனில் அதனிடம் இருக்கும் அணு ஆய்தங்கள் என்ற பயமே!
அதனால், அமெரிக்கா செய்யும் சூழ்ச்சி, 75 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விஷயத்தில் சப்பை கட்டு கட்டிய அமெரிக்கா, இன்று இந்தியாவிற்கு சப்போர்ட் செய்கிறது என்றால் அதற்குள் விஷயமில்லாமலா?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் மீது இந்தியா போர் தொடுத்தால், இன்றைய நிலையில் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியாது, செய்தும் அமெரிக்காவிற்கு நல்லதே! ஆம், இந்தியா, சீனா என்று எது அழிந்தாலும், அமெரிக்கா கொண்டாடும் என்பதுதான் உண்மை. ஆனால் அது பாகிஸ்தானுக்கு ஏற்படும் இழப்பைவிட, பெரும் இழப்பை கொடுப்பது சீனாவிற்குத்தான். ஆம், இந்த காஷ்மீர் வழியாக பாகிஸ்தானிற்கு தரைவழி இணைப்பு உள்ளது. அதன் மூலம் அரபிக்கடலை அடைய முடியும். அது சீனாவின் சில்க் ரோட்டின் நாடி என்றே சொல்லலாம். ஏனெனில், நாளை ஏதோ போரில், இந்தியா சீனாவின் எண்ணெய் கப்பல்களை இந்திய பெருங்கடலில் தடுத்துவிட்டால், அதன் எரிபொருள் கையிருப்பு 60 நாட்களை தாண்டாது என்றால், அதற்கு பின் அதனால் போர் செய்ய மட்டுமல்ல, போண்டா சுடக்கூட முடியாது!

அதற்கு மாற்றாக அமைக்கப்பட்ட வழிதான் இந்த காஷ்மீர் வழியாக போடப்பட்ட பிரமாண்ட சாலைகள். அது இந்தியா கைக்கு போனால், அது மொத்தமாக பாகிஸ்தானில் செய்த முதலீடு பனால் ஆகிவிடாதா? அதனால் சீனா, பாக்குடன் சேர்ந்து இந்தியாவுடன் போருக்கு வரலாம். அப்போ இரு பெரிய நாடுகள் போரில் தாக்கிக்கொண்டு வீழ்ந்து போனால், இந்த இரு நாடுகளும் இல்லாமல் ரஷ்யாவை போரில் வீழ்த்த முடியாவிட்டாலும், பொருளாதரத்தால் வீழ்த்திவிட முடியும் என்பதுதான் அதன் கணக்கு.

இதை நன்கு அறிந்த இந்தியா, அப்படியா அமெரிக்கா, உன் அன்புக்கு நன்றி என்று சொல்லிவிட்டு, பாகிஸ்தான் ராணுவத்திடம் ரகசியமாக பேசிவருகிறது. அதன் மூலம் PoK காஷ்மீரில் மக்கள் புரட்சி ஏற்பட்டு, அவர்களே இந்தியாவோடு இணைவார்கள். அதில் இந்தியா பாகிஸ்தான் ராணுவ மோதலகளுக்கு. மாறாக பாக் ராணுவம் கொஞ்சம் டகால்டி காட்டும், ஆனால் இந்தியாவின் ஆதரவில், அங்கிருக்கும் சிவிலியன் போர்வையில் இந்தியாவுடன் மக்கள் இணைவார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்? முதலில் அதற்கு காஷ்மீர் தலைவலி போகும். இரண்டாவதாக இந்தியா பொருளாதார ரீதியில் மறைமுகமாக உதவும். அதன் சீன கடன்களை அடைக்க உதவும். மேலும், அதன் மீது இருக்கும் பொருளாதார தடைகளை நீக்கி, அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை கொடுக்கும். இதை செய்யும்போது, அமெரிக்காவின் ஆதரவும் முக்கியம். அதைதான் அது வேறு நோக்கிற்காக, அதன் சுய நலத்திற்காக, கொடுத்திருக்கிறதே அதையும் பயன்படுத்திக்கொள்ளும்? அதாவது இந்தியா அடிக்கப் போவது ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

பாகிஸ்தானை சரி செய்து விடலாம், ஆனால் சீனாவை? மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வார் என்பது சீனாவிற்கு நன்கு தெரியும். அதனால் அவரை வீழ்த்த காங்கிரஸ் முதல் தீவட்டி திமுகவரை கூட்டு சேர்ந்து தேத்தலில் தோற்கடிக்க நினைத்தது. ஆனால் அதன் கடும் முயற்சிகள் முற்றிலும் வெற்றிபெறவில்லை. ஆனால் அது செய்த அறகுறை தாக்குதல், அதற்கு எதிராக உறுவெடுத்துள்ளது.ஆம், பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரவில்லை, அதனால் முன்பு போல செயல்பட முடியாது என்று சீனா நினைத்தது. ஆனால் அதன் கனவுகள் மூன்றாம் நாளே தகர்ந்துபோனது. முதலில் வாழ்த்து சொன்ன தைவானுக்கு ஆதரவு தருவதாக சொன்னவுடன் சீனா கொதித்தெழுந்தது. ஆனால் அதற்கு இந்தியா கொடுத்த சம்மட்டி அடி, திபெத்தில் உள்ள 30 நகரங்களுக்கு அதன் பழைய பெயரை வைத்தது. ஆமாங்க, சீனா செய்த அதே ட்கால்டி வேலைதான்.

இது ஏதோ இந்தியா போற போக்கில் வீசும் வீச்சு என்றா நினைக்கிறீர்கள்? நேற்று முன்தினம் ஆரிகன் (Oregon) மாநிலத்தின் செனட், திபெத்தை அங்கீகரிக்க ஒரு ஷரத்தை அமெரிக்க சபையில் தாக்கல் செய்துள்ளார். இதுவெல்லஅம் சமபந்தமில்லாமலா நடக்கிறது? அதனால் இந்தியாவிற்குத்தானே லாபம், அவர்களுக்கு என்ன பயன்? தைவானை தாக்க, சீனா அதன் படைகளை கிழக்கில் ஒன்று சேர்க்க ஆரம்பித்தது. ஏனெனில் அமெரிக்கா ஏற்கனவே உக்ரைன், காஸா என்று இரண்டு இடங்களில் மாட்டிக்கொண்டது. தைவானை சீனா ஆக்கிரமிக்க திட்டமிடும்போது, ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை அதைகரிக்கும் என்றால் அமெரிக்கு அதிலிருந்து வெளிவர முடியாது. அப்படியென்றால் சீனாவை இந்தியா தென்மேற்கில் படைகளை குவித்து எங்கேஜ் செய்தால், அதன் முழு படைகள் தைவானுக்காக போரிட அனுப்ப முடியாதே? அப்படியெனில் அதனால் போரில் இறங்க முடியாது, இறங்கினாலும் அதனால் வெல்ல முடியாது.

அதாவது அவனவன் லாபத்திற்கு ஊரான் வீட்டு நெய்யை ஊற்ற நினைக்கிறான். அதில் இந்தியாவிற்கு என்ன லாபம்? லாபம் இல்லாமலா மோடி அரசு அதை செய்யும்? இந்த சூழலை காஷ்மீரை தன்வசம் எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, திபெத்தை சீனாவிற்கு எதிராக போராட வைக்கலாம். அப்படி போராட்டத்தை தூண்டிவிட்டால் போதும், சீனா, இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் அதன் படைகளை திபெத்தை தாண்டித்தானே அனுப்ப முடிய, அவர்கள் அனுமதிப்பார்களா? இந்தியா ஏற்கனவே லடாக் பகுதிகளில் 10,000 புதிய ராணுவ வீரர்களை அதிகரித்துள்ளது. பீரங்கிகள், தளவாடங்கள், ரேடார்களை அங்கே குவிக்கும் இந்தியா, அதன் 26 ரஃபேல் விமானங்கள் அடங்கிய போர் விமானங்களை ஸ்டேட்டர்ஜிகள் பொஸிசனனா பக்தோக்ரா மற்றும் அருகில் உள்ள விமான நிலையங்களில் அதிகரரித்துள்ளது. சீன எல்லையில் விமான ஓடு தளங்கள் உற்பட பல முக்கிய முன்னெடுப்புகளை இந்தியா அதிவேகமாக செய்துவருவதாக செய்திகள் வருகிறது.

அதாவது, பாகிஸ்தானுடன் போர் செய்ய, எதற்காக சீனா எல்லையில் படைகளை குவிக்கிறது? மேலும் மோடி மீண்டும் ஆட்சியில் பதவி ஏற்கும்போது, பாகிஸ்தான் காஷ்மீரில் வாலாட்டும் என்பது நன்கு தெரியும். காஷ்மீரில் டூரிஸ்ட்கள் வருகை அதிகரித்துள்ளது. மக்களுக்கு அதன்மூலம் வருமானம் வரத்தொடங்கினால், அவர்கள் மீண்டும் சுதந்திரம் எல்லாம் கோரி போராட மாட்டார்கள் என்பது நன்கு தெரியும். அதனால் மோடி பதவி ஏற்ற நாளில் டூரிஸ்ட் பயணிகள் மீது தாக்கினால், டூரிஸ்ட்களை வராமல் தடுப்பது, காஷ்மீர் மக்கள் வாழ்வாதரத்தை கெடுப்பது என்பதுதான் அதன் நோக்கம். மோடி ஆட்சிக்கு எச்சரிக்க விடுப்பது என்று செய்ய நினைத்தது. ஆன இந்தியா அதையும் பயன்படுத்தி, புதியதாக ராணுவத்தை பெருமளவில் டிப்ளாய் செய்துள்ளது. அதற்கு இந்தியா கூறும் காரணம், தீவிரவாதிகளை வேட்டையாட என்று சொல்கிறது.

ஆனால் பாகிஸ்தான் எதை வைத்து தனது ராணுவத்தை கஷ்மீருக்கு அனுப்புவது? சரி அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு டீசல், பெட்ரோல் வாங்க வேண்டும், அதற்கு காசு வேண்டும், அதற்கு கடன்வாங்க வேண்டும், அதை கொடுக்க நாடு வேண்டும். அது இல்லாததால்தானே கோதுமைக்கு பிச்சை எடுக்கிறது. அதற்கே கொடுக்காதவர்கள், இதற்கா கொடுப்பார்கள்? மேலும், மோடி அரசு எதிர்பார்த்ததுபோல பெரிய மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திருந்தால் காத்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதன் கவனங்கள் பொருளாதார முன்னேற்றம் போன்று வேறு வழியில் சென்றிருக்கலாம். ஆனால் இப்போது இந்திய மக்களின் நம்பிக்கையை முழுமையாக மோடி அரசு பெற இதுபோல ஒன்று நடந்தாக வேண்டும். அதை செய்துவிட்டால், மக்கள் ஆதரவு மோடிக்கு வராதா என்ன?

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும், இந்தியா மிக ஆழமாக திட்டமிட்டிருக்கிறது. எப்படி காஷ்மீரில் 370 மீது கைவைத்துப்பார் என்று கத்தியதற்கு பதில் சொன்னதோ, அதுபோல சத்தமில்லாமல் கில்கிட் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும். அதை எதிர்த்தால் சீனா சின்னபின்னமாகும்!அதனால் பாகிஸ்தான் மட்டுமலல், சீனா, அமெரிக்கா எந்த நாடும் முழு அளவில் போரில் இறங்காது, சிறு அளவிலான போரிலும், மீதி போராட்டத்திலும், பொருளாதரத்திலுமே வெல்லும். அதை வெல்ல வேண்டும் என்றால் பொருளாதாரம் வேண்டும்.. இன்று உலகின் மிக பலமான பொருளாதார நிலையை நோக்கி இந்தியா என்பதே நிஜம்!

மரு. தெய்வசிகாமணி

Tags :
Advertisement