For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை ஐசிஎஃப்பில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு!

08:09 PM May 26, 2024 IST | admin
சென்னை ஐசிஎஃப்பில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு
Advertisement

மிழக தலைநகர் சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory, Chennai) 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்குட்பட்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களூம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பயிற்சியிட விவரங்கள்:

Advertisement

கார்பென்டர் (Carpenter)
எலக்ட்ரிசியன் (Electrician)
ஃபிட்டர் (Fitter)
மெக்கானிஸ்ட் (Machinist)
பெயிண்ட்டர் (Painter)
வெல்டர் (Welder)
ஆய்வக உதவியாளர் (MLT-Radiology)
ஆய்வக உதவியாளர் (MLT-Pathology)
Programming and System Administration Assistant -PASAA
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1010

கல்வித் தகுதி:

இதற்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஐ.டி.ஐ. முடித்தவர்களாக இருந்தால் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும். ஆய்வக உதவியாளர் பணிக்கு ஓராண்டு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

வயதுத் தகுதி :

ஐ.டி.ஐ,. தேர்ச்சி பெற்றவராக இருந்தால் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெறாதவர்கள் எனில் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஊக்கத்தொகை

Freshers – (10-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 6000/-
Freshers – (12-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 7000/-
3. Ex-ITI – ரூ. 7000/-

தேர்வு செய்யப்படும் முறை :

பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/index.php- என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்பு எண் - 044-26147748

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சந்தேகங்களுக்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். (வார நாட்களில் 9:30 AM - 17:30 PM) (சனிக்கிழமை - 9:30 AM - 12.25 PM )

விண்ணப்பிக்க கடைசி தேதி -

21.06.2024 மாலை 5:30 மணிக்குள்

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pb.icf.gov.in/act/notification.pdf - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.

Tags :
Advertisement