For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நம் நாட்டின் மிகப்பெரிய செய்தி ஏஜென்சியான ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தைக் கைப்பற்றினார் அதானி!

08:52 AM Dec 17, 2023 IST | admin
நம் நாட்டின் மிகப்பெரிய செய்தி ஏஜென்சியான ஐ ஏ என் எஸ்  நிறுவனத்தைக் கைப்பற்றினார் அதானி
Advertisement

டந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளாகி வரும் அதானி குழுமம் எதையும் பொருட்படுத்தாமல் ஊடகத் துறையிலும் கால்தடம் பதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஏ.என்.ஐ., பி.டி.ஐ. போன்று ஆசியாவிலே மிகப்பெரிய செய்தி முகமையான ஐ.ஏ.என்.எஸ். செய்தி முகமையின் 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை தங்கள் வசம் வாங்கியதன் மூலம் அந்த நிறுவனமே அதானி குழுமத்தின் வசம் சென்று விட்டது.

Advertisement

ஐ.ஏ.என்.எஸ். குழுமமானது 1986ம் ஆண்டு கோபால் ராஜூ என்பவரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஐ.ஏ.என்.எஸ். இந்தியாவிற்கும், வட அமெரிக்காவிற்கும் இடையே செய்திகளை கொண்டு செல்லும் பாலமாக செயல்பட்டது. பின்னர், தங்களது முழு கவனத்தையும் இந்தியா பக்கம் செலுத்திய ஐ.ஏ.என்.எஸ். இந்தியாவில் இருந்து 24 மணி நேரமும் தெற்காசிய முழுவதும் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல, ஆசிய நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் இந்தியாவிற்கு வழங்கும் முக்கிய பணிகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய செய்தி முகமைகளில் ஐ.ஏ.என்.எஸ். ஒன்றாகும்.

Advertisement

இந்தியாவில் உள்ள முன்னணி செய்தி நிறுவனங்கள், முன்னணி செய்தி தொலைக்காட்சிகள், வலைதளங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஆகியோர் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்தின் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல துறைகளும் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட சிறப்பு செய்தியாளர்களுடன் இயங்கி வரும் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்திற்கு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் சிறப்பு செய்தியாளர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான தனியார் செய்தி நிறுவனத்தையும் அதானி குழுமம் வாங்கியது. தற்போது, ஆசியாவின் மிகப்பெரிய செய்தி முகமையான ஐ.ஏ.என்.எஸ். குழுமத்தையும் அதானி குழுமம் வாங்கியிருப்பது ஊடகத்துறையில் அதானி குழுமம் மிக வலுவாக கால்தடம் பதித்துள்ளது என்பதையே காட்டுகிறது.

கடந்த 1988ல் முதல் தலைமுறை தொழில்முனைவோராக சரக்கு வர்த்தகத்துக்குள் நுழைந்த கெளதம் அதானி, தற்போது 13 துறைமுகங்கள், 8 விமான நிலையங்கள் என உள்கட்டமைப்பு தொழில்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவன சாம்ராஜ்யங்களின் உரிமையாளராக விரிவடைந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி, மின் விநியோகம், தகவல் மையங்கள், சிமென்ட், காப்பர் என பலவகைப்பட்ட தொழில்களில் அதானி குழுமம் தடம் பதித்துள்ளது. இது தவிர 5ஜி ஸ்பெக்டரம் ஏலம் எடுத்து தொலை தொடர்பு துறையிலும் அதானி குழுமம் புதிதாக நுழைய உள்ளது.தற்போது கெளதம் அதானிக்கு சொந்தமான குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட், ஐஏஎன்எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஆனால் இந்த பங்குகளின் மொத்த மதிப்பு எவ்வளவு தொகை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

முன்னதாக புளூம்பெர்க்குயின்ட் பிரைமில் வணிகம் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை வெளியிடும் குயின்டில்லியன் பிசினஸ் மீடியா நிறுவனத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதானி குழுமம் வாங்கியது. அதன் பிறகு கடந்த டிசம்பரில் என்டிடிவியில் 65 சதவீத பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தையும் அதானி குழுமம் தனதாக்கியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அதானி மீடியா நெட்வொர்க் லிமிடெட் (ஏஎம்என்எல்), தேசிய பங்கு சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தி்ல், "ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் நிர்வாகம் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் இனி ஏஎம்என்எல் மேற்கொள்ளும்.ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களையும் நியமிக்கும் அதிகாரம் ஏஎம்என்எல் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது

Tags :
Advertisement