For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐயம் ஃபைன் -ரத்தன் டாடா ஓப்பன் ஸ்டெட்மெண்ட்!

04:29 PM Oct 07, 2024 IST | admin
ஐயம் ஃபைன்  ரத்தன் டாடா ஓப்பன் ஸ்டெட்மெண்ட்
Advertisement

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இணையத்தில் செய்திகள் வெளியாகின.இதை அடுத்து என்னுடைய வயது மூப்பு அடிப்படையிலான மருத்துவ சூழல் காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் உள்ளேன். என்னைப் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நான் தொடர்ந்து நல்ல உணர்வுடன் உள்ளேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்," ரத்தன் டாடாவே என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

ரத்தன் டாடா திங்கள்கிழமை அதிகாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நள்ளிரவு 12.30-1:00 மணியளவில் ரத்தன் டாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாயின. ரத்தன் டாடா உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் ஷாருக் அஸ்பி கோல்வல்லாவின் வழிகாட்டுதலின் கீழ் நிபுணர்கள் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் சொல்லப்பட்டது

Advertisement

இச்சூழலில் தனது உடல்நிலை குறித்து ரத்தன் டாடாவே இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் ரத்தன் டாடா(86) அளித்துள்ள பதிலில், "எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். மேலும் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன். என் உடல் நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்

ரத்தன் டாடா 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை இரண்டு முறை உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் டாடா குழும நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகியிருந்தாலும், அதன் அறக்கட்டளைகளுக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்குகிறார். 2008 இல், அவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் பெற்றார்.

Tags :
Advertisement