அயோத்தி தீப உற்சவம்: அகல் விளக்குகள் ஏற்றி சாதித்த கின்னஸ் சாதனையை விட எண்ணெய் சேகரித்த சிறுவர்கள் வீடியோ வைரல்
உ.பி.யில் உள்ள அயோத்தியில் தீபாவளி பண்டிகையொட்டி, தீப உற்சவ் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு தீப உற்சவ விழாவை, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக பிரமாண்ட வகையில் துவக்கி வைத்தார். புனித நகரமான அயோத்தியில் உள்ள பகவான் ராமர் திருக்கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றிவைத்து விழா கொண்டாடப்படும். அந்த வகையில், 2017 -ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 -ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 -ம் ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020 -ம் ஆண்டு 6.06 லட்சம் தீபங்களும், 2021 -ம் ஆண்டு 9.41 லட்சம் தீபங்களும், 2022 -ம் ஆண்டு 15.76 லட்சம் தீபங்களும் 2023 -ம் ஆண்டில் 21 லட்சம் தீபங்களும் ஏற்பட்டன. இந்த வருடம் தீப உற்சவத்தின் போது ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றி ஒளிர்விக்கப்பட்டது. இது மீண்டும் கின்னஸ் உலக சாதனையாக அமைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
14 ஆண்டுகால வனவாசத்தை முடித்துக் கொண்டு ராமர், சீதை மற்றும் லட்சுமணன் அயோத்தி திரும்பியதாக சொல்லப்படும் வழக்கத்தின் காரணமாக அயோத்தியில் தீபோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு வழக்கம் போலவே தீபோற்சவம் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீபோற்சவ விழாவில் 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அமைந்தது. நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழா அதை தகர்த்துள்ளது.
கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்தது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 2017-ல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. 2019-ல் 4.10 லட்சம், 2020-ல் 6 லட்சம், 2021-ல் 9 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான தீபோற்சவ விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 54 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். . இதனால் அந்த நதிக்கரை தீபஒளியில் மின்னியது.
இந்த தீபங்களை 25 ஆயிரம் தன்னார்வலர்கள் ஏற்றினர். கடந்த முறையை விட கூடுதலாக 6.47 லட்சம் தீபங்கள் அதிகமாக ஏற்றப்பட்டது.இதையடுத்து ட்ரோன் மூலம் அங்கு ஏற்றப்பட்டு இருந்த தீபங்கள் எண்ணப்பட்டன. அப்போது இந்த நிகழ்வில் சுமார் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து, சான்றிதழும் வழங்கி உள்ளது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நடைபெற்ற கண்கவர் லேசர் ஒளிவிளக்கு காட்சியும் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி அயோத்தி பகுதி 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போலீஸ் பிரவீன் குமார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
டெயில் பீஸ்:
இந்த தீப உற்சவத்திற்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்விளக்குகள், வட மாநிலங்களில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடுகு எண்ணெயில் ஏற்றப்படுகின்றன. இதனால், அயோத்திவாசிகள் திரண்டு எரியும் விளக்குகளை அணைத்து, அதிலிருந்து கடுகு எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பது தெரிந்துள்ளது. இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் தற்போதும் வைரலாகி வருகிறது. இதன் மீது மத்திய, மாநில அரசுகள் மீது வழக்கம் போல் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
நிலவளம் ரெங்கராஜன்