For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வெயில் காலங்களில் AC உபயோகிக்கும் முறையும், தீங்கும், தீர்வும்!.

08:38 AM Apr 22, 2024 IST | admin
வெயில் காலங்களில் ac உபயோகிக்கும் முறையும்  தீங்கும்  தீர்வும்
Advertisement

ண்மையில் ஓர் நாள் காலை ஒரு பேங்க் எடிஎம் முக்கு பணம் எடுக்க உள்ளே சென்ற போது ஏசி 19 ல் செட் செய்து வைத்திருந்தார்கள் வெளியில் இருந்த வெயிலுக்கும் உள்ளே இருந்த கூலிங்கிற்கும் சம்பந்தமே இல்லை. நான் பேங்க் மேனேஜரை சந்தித்து ஏசியை 24லில் செட் செய்யும்படி கூறினேன் அவர் யாருக்கோ போன் செய்து விசாரித்து விட்டு நீங்கள் கூறியது சரி உடனடியாக சரி செய்கிறேன் என்றார்.

Advertisement

இந்த வெயில் காலத்தில வெளியே பயங்கர சூடா இருக்குன்னு சிலர் (நிறைய பேர்ன்னும் சொல்லலாம்) அவங்க அவங்க வீட்டிலோ அலுவலகத்திலோ A/C யை 20 இன்னும் சிலர் 19,18 இல் எல்லாம் வைக்கிறார்கள் நல்ல சில்லுன்னு ஆயிடும்னு.. அது தவறு வெளியே 38-க்கு மேல குறைஞ்சது வெப்ப நிலை இருக்கும்போது எப்படி ஒரு கம்ப்ரெஸ்சர் 18,19 க்கெல்லாம் ரூம் டெம்பெரேச்சரைக் கொண்டு வர முடியும். வெளியே இருக்கும் வெப்பத்தை விட வித்தியாசம் கம்மியா இருந்தாத்தான் A/C சரியா வேலை செய்யும் இல்லைன்னா compressor சீக்கிரம் அவுட் ஆயிடும். அதனாலே வெளியே இருக்கும் டெம்பெரேச்சருக்கும் ரூம் டெம்பரேச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை குறைச்சுக்கோங்க அப்பத்தான் A/C நல்ல வேலை செய்யும் ரூமும் வெப்பம் இல்லாமல் இருக்கும். பகலில் வெப்ப நிலை ஏசியில் 25-27 இல் செட் பண்ணுங்க இரவில் 23-25 இல் செட் பண்ணுங்க இந்த ஏப்ரல் மே மாத காலங்களில் அதுதான் சரியானது.

Advertisement

மேலும் நம்ம EB இலிருந்து ஒரு நிர்வாக பொறியியலாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்கள் இதோ

ஏசியின் சரியான பயன்பாடு:

*வெப்பமான கோடை காலம் தொடங்கி, ஏர் கண்டிஷனர்களை தவறாமல் பயன்படுத்துவதால், சரியான முறையைப் பின்பற்றுவோம்..

பெரும்பாலான மக்கள் தங்கள் ஏ.சி.க்களை 22-24 டிகிரியில் இயக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் குளிர்ச்சியை உணரும்போது, ​​அவர்கள் உடல்களை போர்வைகளால் மூடி விடுவார்கள்.. !இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி?

நம் உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்பது உங்களுக்குத் தெரியுமா.?உடல் 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் பொறுத்துக்கொள்ள முடியும். இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.அறை வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது, ​​தும்மல், நடுக்கம் போன்றவற்றால் உடல் வினைபுரிகிறது..

நீங்கள் ஏ.சி.யை 20-21-22 டிகிரியில் இயக்கும் போது, ​​அறை வெப்பநிலை சாதாரண உடல் வெப்பநிலையை விட மிகக் குறைவாக இருக்கும்..மேலும் இது உடலில் தாழ்வெப்பநிலை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது, இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இதன் மூலம் உடலின் சில பகுதிகளில் இரத்த வழங்கல் போதுமானதாக இல்லை என்றும் உணரலாம். கீல்வாதம் போன்ற நீண்ட கால குறைபாடுகள் உண்டாகும்.

ஆக ஏசி இயக்க சிறந்த வழி எது? என்று கேட்டால் 26 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட(28-29டிகிரி) வெப்பநிலைகளை அமைக்கவும். முதலில் ஏ.சியின் வெப்பநிலையை 20 - 21 என அமைப்பதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது, ஏ.சி.யை 27 டிகிரியில் இயக்குவது மற்றும் விசிறியை மெதுவான வேகத்தில் வைப்பது எப்போதும் நல்லது. 28+ பிளஸ் டிகிரி மிகச் சிறந்தது. இதற்கு குறைந்த மின்சாரம் செலவாகும், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையும் வரம்பில் இருக்கும்,

இனி ஏசி பயன்பாடு குறித்து டாக்டர் ஒருவர் சொன்ன சேதியிதோ:

* பொதுவாகவே ஏ.சி., அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் விரைவிலேயே உடல் வறட்சி ஏற்பட்டுவிடும். ஏ.சி அறை எந்த அளவுக்குக் குளிராக, வெப்பம் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக உடல் வறட்சி ஏற்படும். நிறைய தண்ணீர் குடிப்பதுதான் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஒரே வழி.

* ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதிலிருக்கும் அழுக்குகள், தூசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை அதிகமாகி, தலைவலி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நோய்தொற்று, நுரையீரல் தொற்றுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுத்துவிடும். அலுவலகத்தில் அதிக நேரம் ஏ.சி-யில் வேலை செய்பவர்கள், மிதமான வெப்பநிலையைப் பராமரிப்பது நல்லது. மிகக் குளிரான வெப்பநிலையில் அதிக நேரம் இருப்பது உடலுக்குக் கேடு உண்டாக்கும்.

*ஏ.சி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், அதைவிட்டு வெளியே வர மனமில்லாமலிருப்பார்கள். இப்படி வெயிலேபடாமல், செயற்கையான குளிரில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். அப்படியே வெளியில் வந்தாலும், பல நேரங்களில் வெயிலும் வெப்பமும் ஒப்புக்கொள்ளாமல், உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

* ஏ.சி... அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, தோலின் ஈரப்பதத்தையும் சேர்த்தே உறிஞ்சிவிடும். ஏ.சி. உபயோகிப்பவர்களால் இதை எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். இதனால் தோல் அரிப்பு, சருமம் வறண்டு போவது, முடி உதிர்வது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

* சிலர் அதிக நேரம் வெயிலில் இருந்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏ.சி-யை நோக்கிச் செல்வார்கள். உஷ்ணமான சூழலில் இருந்துவிட்டு, திடீரென குளிரான சூழலுக்கு உடல் தள்ளப்படும்போது, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

* ஏ.சி-யால் கண்களுக்குத்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கண் அரிப்பது, கண்கள் சிவந்துபோய் எரிச்சல் உண்டாவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை கவனிக்காமல்விட்டுவிட்டால், நாளாக நாளாக கண்பார்வை மங்கி, பார்வைக்குறைபாடு ஏற்படலாம். ஏற்கெனவே கண்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, இன்னும் அது அதிகமாகி, மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.

* ஏ.சி... உடலின் ரத்த அழுத்த அளவு, `க்ரானிக் டிசீசஸ்' (Chronic Diseases) எனப்படும் நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகளை அதிகரிக்கும். இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள் ஏ.சி பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

டாக்டர். செந்தில் வஸந்த்

Tags :
Advertisement