தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரம்மாண்ட சினிமா விழாக்களிலும் சொதப்புவது எப்படி?

11:08 AM Jan 07, 2024 IST | admin
Advertisement

வ்வொரு முறையும் ஆட்சி மாறும்போது அந்த ஆட்சியாளர்களை குளிர்விக்க பிரமாண்ட விழா எடுப்பது பல வருங்களாக தமிழ் திரையுலகம் செய்து வரும் சடங்கு. எந்த மொழியிலும், எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஜால்ரா விழாக்களை யாரும் எடுப்பதில்லை. இந்த முறை ஆட்சிக்கு வந்திருக்கிற மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட விழா எடுக்கிற அளவிற்கு அவர் வாழ்க்கையில் பெரிய கண்டன்ட் எதுவும் இல்லை. அதனால் அவரது தகப்பனார் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி ஆளும் கட்சியை ஆரத் தழுவிக் கொண்டது தமிழ் சினிமா.

Advertisement

பல கோடி செலவில் நடத்தும் ஒரு விழாவிற்கு எவ்வளவு பெரிய திட்டமிடல் வேண்டும். ஆனால் மழைக்காலத்தில் திறந்த வெளியில் விழா வைத்ததே முதல் சறுக்கல். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து நான்தான் முதலில் கேட்டேன். ‘மழை காலத்தில் திறந்த வெளியில் நடத்துகிறீர்களே... மழை வந்தால் என்ன செய்வீர்கள், மழைக்கு பயந்து மக்கள் வராவிட்டால் என்ன செய்வீர்கள் 'என்று. அதற்கு “மழை வராது என்று நம்புவோம். கலைஞருக்காக மக்கள் கண்டிப்பாக வருவார்கள்” என்பது அவர்கள் பதில். மழை வரவில்லை ஆனாலும் நான் குறிப்பிட்டபடி மக்கள் வரவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த பார்வையாளர்களில் 3ல் ஒரு பங்கு மக்களே விழாவுக்கு வந்திருந்தார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி முடித்து கிளம்பியதும் அதிலும் பாதி பேர் கிளம்பி விட்டார்கள்.

Advertisement

விழா மேடைக்கு எதிரே முதல்வர் உள்ளிட்டோர் அமர்ந்திருந்த இடத்தில் அவர்களுக்காக ஒரு பெரிய சாமியானா குடில் அமைத்தது ஆக சிறந்த பைத்தியக்காரத்தனம். பின்னால் இருந்தவர்கள் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் அந்த குடில் மறைத்தது. ஒரு வேளை மழை தூரலோ, மழையோ இருந்திருந்தால் முதல்வரை பாதுகாக்க அப்படி வைத்திருப்பது தவறில்லை. நிகச்சியின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் பேச்சுகளை கேட்க விடாமல் தொடர்ந்து மைக்குகள் மக்கர் செய்தது. ஆனால் மேடையில் அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொள்வது தெளிவாக கேட்டது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளாமல், எழுதி கொண்டு வந்திருந்த 'ஸ்கிரிப்டை' படிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். நிகழ்ச்சி முழுவதும் மேடையில் கலைஞர்கள் ஏதோ தங்கள் கடமையை செய்து விட்டுப்போனார்கள், பார்வையாளர்கள் வந்ததுக்கு கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டுப்போவோம் என்று தேவுடு காத்தார்கள். நிகழ்ச்சி எதுவும் பார்வையாளர்களோடு ஒன்றவில்லை.

ரஜினி, கமல் உள்ளிட்ட பேசிய பலரும் கலைஞருக்கும் அவர்களுக்குமான உறவை தேடிக் கண்டுபிடித்து பேசி விட்டுப் போனார்கள்.

50 சதவிகித விழாவே முடிந்திருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் போன்ற முக்கிய ஆளுமைகள் பேசிவிட்டதால் நிகழ்ச்சி முடிந்து விட்டதாக கருதி பலரும் இடத்தை காலி செய்து விட்டார்கள்.‘தசாவதாரம் ’ என்ற கே.எஸ்.ரவிகுமாரின் நாடகத்தில் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை அழைத்து முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து “இனிமேல் எனக்கு பிறகு இந்த நாட்டை நீதான் பாதுகாக்க வேண்டும” என்று சொன்னதெல்லாம் ஜால்ராவின் உச்சம்.

ஏ.எல் விஜய்யின் ஆவணப்படம் அருமை. கலைஞரின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க விரும்புகிறவர்கள் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம். பெப்சி தலைவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி பிரமாண்ட விழாக்களை நடத்தி அனுபவம் பெற்றவர்தான். ஆனாலும் கலைஞரின் வாழ்க்கையில் இருந்து திரைப்படம் தொடர்புடைய கண்டன்டுகளை சுவாரஸ்யமான மேடை நிகழ்ச்சியாக தருவதில் திணறி இருக்கிறார். திறந்தவெளி நிகழ்ச்சியை நடத்திய அனுபவம் இல்லாமையும் மற்றுமொரு காரணம்.

நயன்தாரா வந்திருந்தார், விஜய், அஜீத் வரவில்லை. அது தனி கதை...!

மீரான் முகமது

Tags :
Cm Mk Stalin‎Kalaignar100kamalkollywoodnayanthararajnitamil film industry
Advertisement
Next Article