ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துல எத்தனை கிராம் தங்கம்?
ஒலிம்பிக்கில் பதக்கம் என்பது, 206 நாடுகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் திறமைக்கு கிடைக்கும், 'உலகளாவிய அங்கீகாரம்' என்பதை மறுக்க முடியாது. அது கிடைக்கலேன்னு நாமெல்லாம் இன்னைக்கு ரொம்பவே வருத்தப்பட்டோம். நம்ம வினேஷ் போகத், நேத்திக்கு நடந்த போட்டியில ஜெயிச்சு தங்கம் வென்றிருந்தால், 'நமக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் தங்கம்' எனப் பெருமைப்பட்டிருக்கலாம்.
அதெல்லாம் சரி...
ஒரு வேளை, நமக்கு அது கிடைச்சிருந்தா அந்த தங்கப் பதக்கத்துல எத்தனை கிராம் தங்கம் இருக்கும்ங்கறது தெரியுமா...!அது தெரிஞ்சா... அட.. போங்கடா, இதுக்கா இத்தனை உழைப்பு...
போராட்டம்...
செலவு... பிரச்சினைகள் ...
பிரார்த்தனைகள்...
மன உளைச்சல்.. என்பதும் புரிய வரும்.
இதுவரைக்கும் நமக்கு தங்கம் கிடைக்கலேன்னாலும் அந்த பதக்கத்தோட மொத்த எடையே 529 கிராம் தான். அதுலயும் மொத்தமும் தங்கம் கிடையாது. ச்சும்மா...
ஆறு கிராம் மட்டும் தான் அதுல தங்கம். மீதி..505 கிராம் வெள்ளியும் 18 கிராம் இரும்பும் தான் அடங்கியிருக்கு.வெள்ளிக்கும் ஒரளவு விலை இருக்கறதால எடைக்கு போட்டா ஒரு தொகை கிடைக்கும்.
(தங்களது உரிமைகளை அங்கீகரிக்கவில்லை என்றால் கிடைத்த பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்திருந்தார்கள் சில வீரர்கள் என்பது வேறு விஷயம்)
ஆனாலும், அது கிடைக்கலையேங்கற வருத்தம் ஒவ்வொரு நிஜ இந்தியனுக்கும் இருக்குங்கறதை மட்டும் மறுக்கவே முடியாது....!