தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கரப்பான் பூச்சிகள் சர்வதேச அளவில் பரவியது எப்படி? - புதிய ஆய்வு முடிவுகள்!

01:55 PM May 22, 2024 IST | admin
Advertisement

ரப்பான் என்றவுடன் நம் குளியலறையில் குடும்பம் நடத்தி, குப்பைத் தொட்டியில் தொல்பொருள் ஆய்வு செய்து, உறங்கிக் கொண்டிருக்கும் நம் மேல் நடைபயின்று, டூத்பிரஷில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிச்ச பற்பசையைத் தின்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஓர் உயிரினம் என நினைவுக்கு வரும். நம் வீடுகளில் பார்க்கும் கரப்பான் பூச்சியின் அறிவியல் பெயர் Americana periplaneta. உலகில் இருக்கும் 4500 கரப்பான் இனங்களில் 1% தான் நம்முடன் வாழ்கின்றன. மற்றவை அடர்ந்த காடுகளில் அமைதியாக இயற்கையின் மறு சுழற்சிக்கு உதவிக்கொண்டிருக்கின்றன. நைட்ரஜன் சுழற்சியில் பெரும்பங்காற்றுகின்றன கரப்பான் பூச்சிகள். மகரந்த சேர்க்கையிலும் உதவி செய்கின்றன.

Advertisement

கரப்பான் பூச்சிக்கு தமிழ் மொழியில் 'கரப்பு /கரப்பான்'- என்ற பெயர் எப்படி வந்தது என்பதையறிந்தால் நமக்கு வியப்பு மேலோங்கும்.

Advertisement

* கரவு > கரப்பு - என்றால் ஒளிவு, மறைவு.
* கரத்தல் = ஒளித்தல் , மறைத்தல்
* கரப்பாக்கு = ஒளிதல் ,மறைதல்.
( secret, hidden, not evident or obvious ).

கரப்பான் = கரந்து ( மறைந்து) அல்லது இருளில் வாழும் பூச்சி.

கரப்பான் பூச்சி என்றால்... இருட்டில், இண்டு இடுக்குகளில் ஒளிந்து மறைந்து வாழும் பூச்சி என்று பொருள். கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வெளியே வராமல் ஒளிந்தும், இருளான நேரங்களில் வெளிப்பட்டு உணவு தேடி வாழும் பண்பு கொண்டவை.

இருட்டிலும், பாறை இடுக்குகளிலும் மறைந்து வாழும் பூச்சிகளுக்கு ஆங்கிலத்தில் கிரிப்டோசோயிக் (CRYPTOZOIC) என்ற பொதுவான ஒரு பெயர் உண்டு

முன்னதாக ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இவை ,வணிகம் பொருட்டு இடம்பெயர்ந்த மக்களுடன் இணைந்து உலகம் முழுக்கப் பரவியது. 360 மில்லியன் வருடங்கள் பழைமையான கார்பனிஃபெரஸ் எரா (carboniferous) முதல் கரப்பான்கள் உலகில் வாழ்வதாக ஆராய்ச்சிகள் சொன்ன நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. மற்ற ரோபோக்களை விட அதிவேகமாக நகரும் ஆறு கால் கொண்ட ரோபோவை வடிவமைத்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ஃபுல் (Robert full) அந்த ரோபோவின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்தது கரப்பான் என்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
asiaCockroachesGlobal Dominationnew researchspread around the globetracks
Advertisement
Next Article