தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஜாதிகள் தேர்தலில் எப்படி தாக்கத்தை உண்டு செய்கிறது?

05:42 PM Feb 10, 2024 IST | admin
Advertisement

தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் ஜாதிகள் பெரும்பங்கு வகிக்கிறது! ஜாதி என்பதை பெரும்பாலும் ஆதிக்க ரீதியாகவே நம்மை பார்க்க வைத்திவிட்டது பிரிடிஷ்! அது மனித வாழ்வில் ஒரு மிகப்பெரிய அனுபவ அறிவியலில், உளவியல் (psychology) கண்டுபிடிப்பு. ஆனால் நம்மை பிரித்தாள அதை எதிராக மாற்றி விட்டது பிரிடிஷும், பின்பு வந்த அதன் கைக்கூலிகளான திராவிஷ அரசியலும்தான்! ஏற்கனவே பல பதிவுகள் ஜாதியை பற்றியும், அதன் முக்கியத்துவத்தை பற்றியும், அது மீண்டும் கொண்டவர வேண்டியதற்கான தேவைகளை பற்றியும் எழுதியிருக்கிறேன். அதாவது ஒருவரது அப்பா, அம்மா இருவரும் டாகடர்களாக இருந்தால், குழந்தைகள் அந்த தொழில் செய்வது எவ்வளவு எளிதோ, அதை விட பல மடங்கு உயர்ந்தது இந்த ஜாதிய கட்டமைப்பு.

Advertisement

இன்று உலகில் பல வியாதிகளுக்கு காரணம் ஸ்ட்ரெஸ், அதற்கு அதிமுக்கிய காரணங்கள் எதுவென்று பார்த்தால் தொழில் என்பது புரியும். அதற்கு காரணம் தொழிலில் அனுபவம் இல்லாததே! அந்த மன அழுத்தம் நம் அப்பாக்கள், தாத்தாக்களிடம் இருந்ததில்லையே! காரணம் ஜாதி அடிப்படையில், சமுதாயமாக அமைந்த தொழில். ஆனால் நாம் அதை நல்ல தொழில், கெட்ட தொழில் என்று கேவலப்படுத்தி விட்டோம். அப்படியெனில் அந்த சமுதாயம் என்பது தொழிலில் அடிப்படையில் அமைந்தது. அந்த தொழில் தேவைகளுன் அடிப்படையில் அமைந்தது. அதனால் கிராமங்கள் அந்த தேவைக்கு ஏற்பவே இயற்கையாகவே கட்டமைக்கப்பட்டது. அதனால் ஜாதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலான பலமும், பலவீனமும் இருந்தது. அது எப்படி அமைந்தது என்பதை பொருளாதாரம் மற்றும் உளவியல் ரீதியாக இங்கே விளக்குகிறேன்! உண்மையில் இந்த பதிவு ஆராய்ச்சிக்குரியது!

Advertisement

சிறுக்கிணர் கிராமம் என்பது 100 வீடுகளை கொண்ட ஒரு சிறு கிராமம். அந்த கிராமத்தில் சரிபாதியாக 50 வீடுகள் விவசாயம் செய்தார்கள். அவர்களில் 10 வீடுகள் பெரிய விவசாயிகள், 40 வீடுகள் (வீடுகளை பேர் என அழைப்போம்). அந்த கிராமத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். அந்த தொழிலை செய்தவர்கள் கவுண்டர்கள். அதாவது 50% பேர் கொண்ட பெரிய ஜாதியாக அங்கே இருக்கிறார்கள். இவர்களிடம் விவசாய நிலங்களும், விவசாயம் செய்ய ஓரளவு நிலபுலன்கள் இருந்தது. அடுத்த படியாக அந்த விவசாய தொழில்களை அவர்களுக்கு உதவியவர்கள் அருந்ததியினர். கடும் உழைப்பாளிகள். அவர்கள் இல்லாவிட்டால் விவசாயம் நடக்கவே, நடக்காது. அதனால் 15 வீடுகள் இருந்தது அதாவது 15% பேர் அங்கே அருந்ததியனர் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக கவுண்டர்களை சார்ந்து இருந்தார்கள் என்பது உண்மையில் பொய். உண்மையில் கவுண்டர்கள்தான் அருந்ததியினரை சர்ந்திருந்தார்கள் என்பதே உண்மை. அவர்களின் கடுமையான உழைப்பால், விவசாயிகளுக்கு செல்வத்தை கொடுப்பவர்கள் என்பதால், அவர்களை பெருமாள் என்ற தெய்வமாகவே அவர்கள் பார்க்கப்பட்டார்கள்.

அடுத்து அதிகமாக இருப்பது ஆதி திராவிடர். ஒரு 10 குடும்பங்கள் அங்கே இருந்தது. அவர்களின் முக்கிய பணி, கிராமத்தின் சுத்தத்தை பேணியவர்கள். அவர்கள் இல்லாத ஒரு கிராமம், குப்பை தொட்டி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் கோயில் முதல் சுடுகாடு வரை சுத்தமாக இருந்ததற்கும், கோயில் திருவிழாவில் பறை அடித்து இறவனையும், மக்களையும் கவர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சிவனின் அங்கமாகவே பார்த்தார்கள். அடுத்ததாக போயர்கள் என்று சொல்லப்படும் கட்டிட தொழிளாலர்கள் ஒரு 5 குடும்பம் இருந்தது. அவர்கள் வீடுகளை கட்டுவது முதல் விவசாய தேவைகளுக்கு உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தக் கூடியவர்கள். அவர்கள் ஒவ்வொரு குடும்பம ஒரு வகையில் specialization ஆக இருப்பார்கள். அதில் சிலர் கிணறு வெட்டுவதில் நிபுனத்துவம் கொண்டவர்கள். இவர்கள் கடும் உழைப்பாளிகள்! கோயில் சிலை வடிப்பதும் இவர்களில் ஒரு பிரிவினர்தான்.

அடுத்து வீடுகள் அமைப்பது முதல் விவசாய கருவிகள் செய்வது, கோயிலில் அழகு வடிவமைப்புகள் முதல் பாதுகாப்பு வரை மர வேலை செய்த ஆசாரியார்கள். இவர்கள் இரண்டு குடும்பம் இருந்தார்கள். இவர்களுக்கு சாதாரண கணக்கு முதல் Trigonometry வரை நுட்பம் தெரிந்தவர்கள். இவர்கள் வண்டி செய்வதும், அதில் பயன்படுத்தும் காளைகளுக்கு லாடம் அடிப்பதிலும் இவர்கள் வல்லுனர்கள். அடுத்து சக்கரக்கத்தி என்றும் நாவிதர்கள் என்றும் சொல்லப்படும் தொழிலாளிகள் இரண்டு குடும்பங்கள் இருந்தார்கள். இவர்கள் சிகை அலங்காரம் மட்டுமல்ல மருத்துவத்தில் கை தேந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தின் இயற்கை மருத்துவர்கள் இவர்களே! இவர்கள் கோயில்களில் நடக்கும் விழாக்களில் குருக்களுக்கு உதவுவார்கள். அடுத்து சலவைத் தொழிலாளிகள் அந்த கிராமத்தின் ஆடைகளை துவைப்பது முதல் தெய்வங்களுக்கு துணி மூலம் அலங்காரம் செய்வதுவரை செய்வது இவர்களே! இவர்கள் ஒரு மூன்று குடும்பம் இருந்தார்கள்.

அடுத்து உடையார்கள் அல்லது குயவர்கள் அந்த கிராமத்தின் மண் பாண்டங்கள் முதல் தெய்வ சிலைகள், குதிரைகள் வரை செய்து, கோயில் அமைப்பு அலங்காரம் செய்வதுவரை செய்வது இவர்களே! இவர்கள் ஒரு இரண்டு குடும்பம் இருந்தார்கள். அடுத்து கோயில்களில் பூஜை முதல் உணவு தயாரிப்பதுவரை செய்யும் பண்டாரங்கள். இவர்களின் ருசியான உணவுக்கு அடிமை ஆகாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இவர்கள் இரண்டு குடும்பங்கள் இருந்தார்கள்.அடுத்து விவசாயம் சார்ந்து செய்யும் நாடார்கள் குடும்பம் ஒரு இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் பிரதான தொழில் பனைமரம் ஏறி அதில் பதனி சேகரித்து, அதை கருப்பட்டி ஆக்குவது முதல், விவசாயத்திற்கு உதவுவது வரை இவர்கள் செய்தார்கள். அடுத்து அங்கே விவசாய தொழிலின் அங்கமான ஆடு, மாடு வளர்க்கும் தொழில் நிபுனத்துவமும், அதை வியாபரம் செய்யும் தொழில் செய்தவர்கள் ஒரு இரண்டு குடும்பம் இருந்தார்கள். அவர்கள் கோனார்கள் என்பார்கள். அவர்கள் வெட்னெரி டாக்டர்களாகவும், பாலை வைத்து தொழில் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை யாதவர்கள் என்றும் சொல்வார்கள்.

அடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான பொருட்களை வாணிபம் செய்யும் செட்டியார்கள் இரண்டு குடும்பம் இருந்தது. அவர்கள் உணவு பொருட்களின் சில்லறை விற்பனை முதல் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து உதவும் தொழில்களையும் செய்தார்கள். அடுத்து அந்த ஊருக்கு கல்வி கொடுப்பது முதல், கோயில் பூஜைகள் செய்வது வரையிலும், கிராமத்திற்கு தேவையான அறிவை கொடுத்த குருக்கள் என்ற பிராமணர் ஒரே ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. ஏனெனில் அறிவை சொல்லித்தருவதில், ஆலோசனை வழங்குவதில், நல்ல நேரம், சுப விஷேஷங்கள் முதல் ஜோதிடம் வரை தெரிந்தவர்களுக்குள் இரு வேறு பார்வை வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு ஒரு குடும்பம் இருந்தது!

இப்படியாக ஒரு கிராமம் ஜாதி அடிப்படையில் பிரிந்து இருந்தது என்று சொல்வது மிக்கதவறானது. ஒருவருகொருவர் உதவி சேர்ந்திருந்தார்கள் என்பதுதான் மிகச்சரியானது. ஆனால் அவர்களை பிரிடிஷாரும், பின்னாளில் வந்த அரசியல் வாதிகளும் பிரித்து ஒருவருக்கொருவர் பகையாக்கி, மேல்.ஜாதி, கீழ் ஜாதி என்று துவேஷத்தை வளர்த்து அரசியல் ஆதாயம் பார்த்தார்கள்.எங்கள் கிராமத்தில்.விவசாயம் செய்தவர்கள் கவுண்டர்கள் என்றால், அதுவே மதுரை பக்கம் தேவர்கள் என்றும், வடக்கில் வன்னியர்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்கள் உண்மையான ஜாதி விவசாயிகள் என்பதே. நெசவுத்தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் ஒரு சில கிராமங்கள் சேர்ந்து வாழ்வார்கள், எல்லா கிராமங்களிலும் இருக்க மாட்டார்கள்.

இன்று அரசியல் ரீதியாக பார்த்தால் ஒரு கிராமத்தில் ஓட்டு சதவீதம் என்பது சற்றேரக்குறைய இப்படித்தான் இருக்கும்!

கவுண்டர்கள் : 50%
அருந்ததியினர் : 15%
ஆதி திராவிடர்கள் : 10%
ஒட்டர்/போயர்கள்: 5%
ஆசாரிகள் : 3%
நாவிதர்கள்: 2%
சலவைத்தொழிலாளி: 2%
உடையார்கள்: 2%
பண்டாரங்கள்: 2%
நாடார்கள்: 2%
கோனார்கள்: 2%
செட்டியார்கள்: 2%
மற்றவர்கள்: 2%
பிராமணர்: 1%

நகரங்களில் இதே போன்ற ஜாதிய கட்டமைப்புகள் இருந்தாலும், அங்கே இருக்கும் பிரதான தொழில், வாணிபத்துக்கு ஏற்ப அந்த ஈகுவேஷன் மாறும். மைனாரிடிகள் என்று சொல்லப்படும் இஸ்லாமியர்கள் நகரங்களில் தொழில் செய்தார்கள். கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசாரியார், நகரத்துக்கு போய் பெரியளவில் ஆட்களை வைத்து தொழில் செய்வார். அவருக்கு தேவையான ஆட்களை கிராமங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வார்கள். அது மற்ற எல்லா தொழிலாளர்களுக்கும் பொருந்தும்! கிறிஸ்தவர்கள் என்பது பிரதானமாக மேற்சொன்ன ஏதாவது ஒரு ஜாதிய கட்டமைப்பில் இருந்து மதம் மாறியவராகத்தான் இருப்பார். அவர்களுக்குள் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற ஏற்றத்தாழ்வுகளை செய்துதான் கூட்டு குடும்பங்களாக ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்தவர்களுக்குள், தாழ்வு மனப்பான்மையை வளர்த்து மதம் மாற்றம் செய்தார்கள்.

பின்னாளில் அரசியவாதிகளின் இட ஒதுக்கீடு செய்து மேலும் பிரித்தது. உண்மையில் அவர்கள் தொழில் சார்ந்து இட ஒதுக்கீடு செய்து அவர்கள் தொழில மேம்படுத்துவதற்கு பதிலாக, வீழ்த்திவிட்டார்கள். உதாரணமாக. Agriculture துறைக்கு கவுண்டர், வன்னியர், தேவர் என்றும், டாக்டர்கள் படிப்பிற்கு நாவிதர்களுக்கும், இசை 🎵 துறையில் ஆதி திராவிடர்கள் என்றும் இட ஒதுக்கீடு தந்து அந்த தொழிலில் நிபுனத்துவம் கொடுத்து டென்ஷன் இல்லாத ஒரு வாழ்வை கொடுத்திருக்க வேண்டும்! தமிழகத்தில் பிரதானமாக இருக்கும் ஜாதிகளின் கட்டமைப்பின்படி வாக்காளர்கள் கீழ்கண்டவாறு இருப்பதாக சொல்கிறார் டாக்டர் பிரவீன் குமார். அது ஏறக்குறைய எங்கள் கிராமத்தின் ஜாதீய சமன்பாடுகளையே பிரதிபலிக்கிறது!

Size of TN electorate - 6.18 Crores (6,18,00,000) - Dr. Praveen Kumar

Percentage of population by communities and sections!
Brahmin – 3%
Minorities – 13%
Dalit - 17%
Vanniyar - 16%
Kongu Vellalar – 10
Mudaliar – 8%
Linguistic Minorities – 11%
Hindu Nadar - 8%
Mukkulathor – 9%
Eligible voters by communities and sections!
Brahmin – 1854000
Minorities – 8034000
Dalit - 10506000
Vanniyar - 9888000
Kongu Vellalar – 6180000
Mudaliar – 4944000
Linguistic Minorities – 6798000
Hindu Nadar - 4944000
Mukkulathor - 5562000

இந்த ஜாதிகள் தேர்தலில் எப்படி தாக்கத்தை உண்டு செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

மரு. தெய்வசிகாமணி

Tags :
castes‎electionsinfluencevoters
Advertisement
Next Article