தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஹாட் ஸ்பாட் - விமர்சனம்!

08:11 PM Mar 28, 2024 IST | admin
Advertisement

ண்மையில் ஆந்தை ரிப்போர்ட்டர்ஸ் டீம் ஒரு நிறுவனத்துக்காக இளைஞர், இளைஞிகளிடம் எடுத்த ஒரு சர்வேயின் போது, இப்போது பொதுவெளியில் நடமாடும் போது 48 சதவீதம் பேர் ஜட்டி போடுவதில்லை என்று தெரிய வந்தது. அது போல் தங்கி இருக்கும் வீடு அல்லது ஃபிளாட்டில் யாருமில்லாத நேரத்தில் அம்மணமாக இருக்கும் இளம் பெண்ஜ்களின் எண்ணிக்கை 64 சதவீதம்.. இது போல் புது டைப்பில்லான சிந்தனையுடன்  வந்துள்ள படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தோ, படம் பெற்றிருக்கும் A சான்றிதழ் பார்த்தோ, முவேதும் எடுக்காமல், 18 வயதினர் தாராளமாகப் போய்ப் பொழுதைக் கழிக்கத் தகுந்த படமே `‘ஹாட் ஸ்பாட்’ படம்

Advertisement

அதாவது நான்கு கதைகளை அந்தாலஜி ஸ்டைலில் ஒரு இயக்குனராக நடித்தப்படி தயாரிப்பாளராகவே நடித்த புரொட்யூஸரிடம் கதை சொல்ல வரும் நாயகன் விக்னேஷ் கார்த்திக் ஒரு நான்கு கதைகளை சொல்வதுதான் படம். இவைகளில் இரண்டு ரொம்பவும் மலிவான ரசனை உள்ள கதைகள். முதலும் கடைசியும் ஓகே ரகம்.

கதையைப் பற்றி கொஞ்சூண்டு விரிவாகச் சொல்வதானால் படமெடுக்க கதை சொல்ல வரும் டைரக்டரிடம் வித்தியாசமான கதையை எதிர்பார்க்கும் தயாரிப்பாளர் அவருக்கு ஜஸ்ட் டென் மினிட்ஸ் மட்டுமே கொடுக்கிறார். அதற்குள் கதை சொல்லி தயாரிப்பாளரை கமிட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டைரக்டர், ஆண் கழுத்தில் பெண் தாலி கட்டுவதும், அதையடுத்து திருமணத்திற்குப் பிறகு பெண்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் ஆண்கள் செய்வது போல் சித்தரித்து ஒரு கதை சொல்கிறார். பெண்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, அவர்களால் சொல்ல முடியாத மன குமுறல்களை சொல்லும் விதமாக இருக்கும் இந்த கதையை கேட்ட தயாரிப்பாளர், தொடர்ந்து இயக்குநரிடம் கதை கேட்கிறார். இதேபோல், மேலும் மூன்று கதைகளை டைரக்டர் சொல்கிறார். இந்த மூன்று கதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் அந்தாலஜி போல் அமைந்தாலும், இந்த நான்கு கதைகளையும் சொல்லும் டைரக்டருக்கும், அதை கேட்கும் புரொடியூஸருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அவர்கள் தான் இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமார்பன்.

Advertisement

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் நடித்திருக்கிறார்கள். இருவரும் காதலர்களாக இருக்க காலம் மாறிய நிலையில் பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய் என்ன நடந்தது என்ற நிகழ்வுகளாக நகர்கிறது கதை. பெண்ணியத்தைப் போற்றும் இந்தக் கதையை ரசித்து வரவேற்க முடிகிறது. சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் நடித்திருக்கும் இரண்டாவது கதை ஒரு மாதிரியாக ஆரம்பித்து ஒரு மாதிரியாகவே முடிகிறது. இந்த கதைக்கு இயக்குனராலேயே முடிவு சொல்ல முடியவில்லை என்பதால் ஒரு மாதிரி முடித்து வைக்கிறார். “உங்களுக்கு வந்தால் இரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று பெண்கள் ஆண்களை பார்த்து கேட்கும் கேள்வியை மையப்படுத்திய மூன்றாவது கதையில் சுபாஷ் - ஜனனி நடித்திருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண் பாலியல் தொழிலாளியாக மாறும் சுபாஷ், தனது காதலி ஜனனிக்கு விசயம் தெரிந்தவுடன், அது காமம், உன்னிடம் மட்டும் தான் காதல், என்று சொல்வதும், அதற்கு ஜனனி பதிலடியாக எடுக்கும் அதிரடி முடிவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே கதையில் அம்மாவும் மகனும் பார்க்கக் கூடாத சூழலில் பார்த்து, பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறார்கள். அதையெல்லாம் கேட்பதற்கே அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. அதையும் கூட தியேட்டரில் சில பேர் கைதட்டி ரசிப்பது இன்னும் அருவருப்பு அடையச் செய்கிறது.கலையரசன் - சோஃபியா ஜோடியை மையமாக வைத்து சொல்லப்படும் நான்காவது கதை, தொலைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் கொடுமைகளை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. சிறுவர்களை பணியில் அமர்த்தினால் குற்றம் என்று சொல்லும் சட்டம், இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை நடிக்க வைப்பதோடு, வயதுக்கு மீறிய காட்சிகள் மற்றும் வசனங்களில் நடிக்க வைத்து கொடுமைப்படுத்துவதை ஏன் கேட்பதில்லை? என்ற கேள்வியை முன் வைத்திருக்கும் இயக்குநர், பெற்றோர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார்.

சொல்லி இருக்கும் நான்கு கதைகளில் நடித்திருக்கும் எல்லா நட்சத்திரங்களும் தங்களது நடிப்பு மூலம் கதைகளில் இருக்கும் உணர்வுகளை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்கள். கோகுல் பினாயின் கேமரா ஒர்க்கில் நான்கு கதைகளும் நான்கு விதமான காட்சியமைப்புகளில் கவனம் பெறுகிறது. இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதையை சுற்றி வரும் பின்னணி பாடலும், பின்னணி பீஜியமும் இப்படத்துக்கு வந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

ஆனால் , படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காகவே ஆணுக்குப் பெண் தாலி கட்டுவது, லெஸ்பியானிசம், அண்ணன் தங்கை காதல், சுய இன்பம், அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் குழப்படிகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் என்று சமுதாயத்தில் முகம் சுளிக்க வைக்கும் சகல விஷயங்களையும் வரிசைக் கட்டி எடுத்திருப்பது முகத்தைச் சுளிக்கவே வைக்கிறது. அத்துடன் நான்கு கதைகளும் ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிவதில் அலுப்பு தட்டுகிறது. காட்சிகளின் நீளமும் சோதிக்கவே செய்கிறது.

மொத்தத்தில் ஹாட் ஸ்பாட் - பார்க்கலாம்- ஆனா பார்க்க வேண்டாம் என்ற மனநிலையை கொடுத்தனுப்புகிறது

மார்க் 2.75/5

Tags :
Hotspotreview
Advertisement
Next Article