For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முதல் பெண் வழக்கறிஞர் கண்ணகி-'மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை அமர்வு'விழா ஹைலைட்ஸ்!

06:19 PM Jul 20, 2024 IST | admin
முதல் பெண் வழக்கறிஞர் கண்ணகி  மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை அமர்வு விழா ஹைலைட்ஸ்
Advertisement

தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது.அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்த மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தினாலும் 2002ல் பதவியேற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உறுதியான முயற்சியாலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றக் கட்டிடங்களும் உருவாயின. குடியரசுத் தலைவரின் அறிவிக்கைக்குப் பிறகு 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.]இக்கிளை ஐகோர்ட் ஜூலை 24 2004 ] முதல் அப்போதைய இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால், சென்னை ஐகோர்ட்த் தலைமை நீதிபதி பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான நீதியரசர்கள் சிவராஜ் வி பாட்டீல், கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் அரு. இலக்சுமணன், மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,]மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் ,முன்னிலையில் துவக்கி வைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.அப்படி ஐகோர்ட் மதுரைக்கிளை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நினைவு ஸ்தூபியை திறந்து வைத்தார்.

Advertisement

இதில் சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், சுந்தரேசன், விஸ்வநாதன், மகாதேவன் மற்றும் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோரும், ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்றனர். அப்போது,முதல் பெண் வழக்கறிஞராக கண்ணகியின் 20ஆம் ஆண்டு நினைவு ஸ்தூபியை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 'மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை அமர்வு' என்ற பெயர் பலகையை சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார். முன்னதாக 'மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை கிளை' என இருந்த பெயர் தற்போது 'மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மேலும், விழாவில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 200 இ-சேவா மையங்களும் திறக்கப்பட்டன.

Advertisement

இவ்விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பேசும்போது , "ஔவையார், அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார்.இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. மதுரை தூங்காநகரம், 24 மணி நேரமும் விழித்துக் கொண்டு இருக்கும் நகரம் மதுரை. தமிழ் கலாச்சாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. சென்னை ஐகோர்ட் ஆலமரம் போன்றது. நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது.

நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்த போது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் போது, அது சமூகத்தின் பிரச்னையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது. மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது.தற்போது நீதிமன்ற விசாரணைகள் இ-கோர்ட், வீடியோ கான்பிரன்ஸ் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. கடின உழைப்பு, தொழில் வழி முறைகளை கடைபிடித்து, தடைகளை உடைத்து இளம் வழக்கறிஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.இளம் வழக்கறிஞர்களுக்கு தொடக்கத்தில் தேவையான வாழ்வாதார நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உலகிலேயே ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதல் பெண் வழக்கறிஞராக கண்ணகி செயல்பட்டுள்ளார்தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாதாடினார். மதுரையில் ஆண்டுக்கு 4 மாதம் மீனாட்சியம்மன் ஆட்சி நடைபெறும். இந்த 21-ம் நூற்றாண்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மதுரையில் அப்போதே அன்னை மீனாட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு சிறப்பு மிக்க நகரம் மதுரை. " என பேசினார்.

Tags :
Advertisement