தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

'லால் சலாம்' படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்!

06:48 PM Feb 06, 2024 IST | admin
Advertisement

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' .ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'லால் சலாம்' படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதையொட்டி லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

https://www.aanthaireporter.in/wp-content/uploads/2024/02/hkPX3eJ6zcJa4hGT.mp4

இந்நிகழ்வில் தம்பி ராமையா பேசியது:

தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித
மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளதாக கூறினார்.படத்தில் நடிக்க தனக்கும் வாய்ப்பளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Advertisement

நடிகர் செந்தில் பேசியது:

அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

விவேக் பிரசன்னா பேசியது

"படத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்பதுதான் படத்தின் கரு.அதை பார்த்துவிட்டு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் கொடுக்கும் விமர்சனம் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்.இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

மூணாறு'ரமேஷ் பேசியது

சிறுவயதில் இருந்து தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் அவருடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமை கொள்வதாகவும் அவருடைய மகளின் இயக்கத்தில் நடித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். இது ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.தங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

நிரோஷா பேசியது

ரஜினிகாந்த்துடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்ததாகவும் கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனதாகவும், அதனால் தனது திரை வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்ததாகவும் இந்த திரைப்படம் மூலமாக திரு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனக்கு நல்லதொரு வாய்ப்பை கொடுத்துள்ளதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான ஒரு நடிப்பை பெற்றுக் கொள்வார் என்று பாராட்டினார்.

விக்ராந்த் பேசியது

தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது போதும் என்று இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு வந்ததாகவும், அப்பொழுது தான் தனக்கு இன்னும் திரைப்பயணம் இருப்பதாகவும், இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார். தன்னுடன் நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்ததாகவும் நல்ல ஊக்கம் அளித்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

விஷ்ணு விஷால் பேசியது

15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் தனக்கு ஒரு பரிசாக கிடைத்திருப்பதாகவும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்வதாகவும் கூறினார். ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் திறம்பட செய்து முடித்ததாகவும் கூறினார். பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

சத்யா N.J. - ஆடை வடிவமைப்பாளர் பேசியது

லால் சலாம் திரைப்பட வாய்ப்பு தனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். 90-களின் காலகட்டங்களில் திரைக்கதை அமைந்து இருப்பதால் அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வடிவமைப்பது தனக்கு ஒரு சவால் நிறைந்த பணியாக இருந்ததாக கூறினார். கூடவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் தனக்கு அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது

ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியர் தன்னிடம் இரண்டு கதை கூறியதாகவும் அதில் ஒன்றுதான் லால் சலாம் என்றும் கூறினார். இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசுவதாக கூறினார். குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது என்றும் கூறினார். அரசியல் என்பது எல்லாத்திலும் உள்ளது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது என்று கூறினார்.மேலும் படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் தன்னுடைய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags :
Aishwarya RajinikanthcrewLal SalaamLyca ProductionsPrees MeetVishnu Vishal
Advertisement
Next Article