சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி- ஐகோர்ட் உத்தரவு!
கோலிவுட்டால் மறக்க முடியாத நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகனும், செவாலியே சிவாஜி பேரனும், ஆக்டருமான துஷ்யந்த், அவரது ஒய்ஃப் அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிச்சாய்ங்க. அப்பபட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் அப்படீங்கற நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தாய்ங்க. இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுச்சு.
ஆனால், கடன்தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை ஐகோர்ட் ரிட்டயர் ஜட்ஜ் டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார். அந்த உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்
அந்த உத்தரவின்படி படத்தின் அம்புட்டு உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையலை -னு சொல்லிகூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஐகோர்ட்டி வழக்கு தாக்கல் செஞ்ச்சாய்ங்க.
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த ஜட்ஜ் அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்ட போதும், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யலையாம் .இதை அடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். மேலும் ஜப்தி குறித்து சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுதினம் ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
அடிசினல் ரிப்போர்ட்:
சிவாஜியின் அன்னை இல்லம் இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. அவர், அப்போதையை ஒரிஷா மாநில கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெருவுக்கு முதலில் சவுத் போக் ரோடு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் இந்த வீட்டை1959-ம் ஆண்டு வாங்கினார். நடிகர் சிவாஜி கணேசன் செவாலியே விருது வாங்கியதையடுத்து, சென்னை மாநகராட்சி தெற்கு போக் சாலையை ‘செவாலியே சிவாஜி கணேசன் சாலை’ என்று மாற்றியது.
செவாலியேவின் அன்னை இல்லத்தின் தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹால் உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் இங்கே ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய உணவு தூள் பறக்கும். பெருந்தலைவர் காமராஜர் , வி.பி. சிங் முதல் எம்.ஜி.ஆர் வரை வந்து உணவு உண்டு சென்ற வீடு இதுவாகும். ஞாயிற்றுக்கிழமையானால் மட்டன், சிக்கன், மீன் பிரியாணி, அசைவ உணவுகள் அமர்க்களப்படும். நடிகர் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளின் சமையல் சினிமா உலகில் வெகு பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். தற்போதும், பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.அத்தகைய பெருமைமிக்க அன்னை இல்லம் ஜப்தி ஆகப் போவது கோடம்பாக்கத்தையும் தாண்டி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நிலவளம் ரெங்கராஜன்