For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

96வது ஆஸ்கர் விருதின் முழுப் பட்டியல் இதோ!

05:28 PM Mar 11, 2024 IST | admin
96வது ஆஸ்கர் விருதின் முழுப் பட்டியல் இதோ
Advertisement

ர்வதேச சினிமாவில் உச்சபட்ச கவுரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள்தான். 1929 ஆம் ஆண்டுமுதல் ஆஸ்கர் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 96–வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன.

Advertisement

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விருது விழா 'Disney + Hotstar' ஒடிடி தளத்தில் ஒளிபரப்பானது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் (Jimmy Kimmel) நான்காவது முறையாக ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பல்வேறு ஹாலிவுட் நடிகைகள் அழகுப் பதுமைகளாக உடையணிந்துக் கொண்டு விருது விழாவை கண்கவர் நிகழ்ச்சியாக மாற்றினார்கள்.

Advertisement

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளைத் தட்டியுள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களின் முழுப்பட்டியல் வருமாறு:–

சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்

சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்

சிறந்த ஆடை வடிவமைப்பு: நெப்போலியன்

ஆவணக் குறும்படம் :

சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்

சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்

சிறந்த ஒரிஜினல் இசை: இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி

சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்

அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்

சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை Poor Things படத்திற்கு நாடியா ஸ்டேசி, மார்க் கூலியர், ஜோஷ் வெஸ்டன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த உடை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதையும் Poor Things படத்திற்காக ஹாலி வாடிங்டன் பெற்றார்

சிறந்த கலை இயக்கத்திற்கான விருதை ஜேம்ஸ் பிரைஸ், ஷோனா ஹீத், சூஸா மிஹாலெக் ஆகியோர் poor Things படத்திற்காக பெற்றுக்கொண்டனர்.

சிறந்த மூல திரைக்கதைக்கான விருதை Anatomy Of A Fall திரைப்படத்திற்காக ஜஸ்டின் டிரெய்ட், ஆர்தர் ஹராரி ஆகியோர் வென்றனர்.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படத்திற்காக கோர்ட் ஜெஃபர்சன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்காக விருதை The Zone Of Interest படத்திற்காகலண்டனை சேர்ந்த ஜானதன் கிளேசர் பெற்று கொண்டார்.

The Zone Of Interest படத்திற்காக டார்ன் வில்லர்ஸ், ஜானி பர்ன் ஆகியோர் சிறந்த ஒலிப்பதிவு விருதை பெற்றுக் கொண்டனர்.

Barbie படத்தின் What Was I Made For என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. பில்லி எல்லிஷ் உள்ளிட்ட இருவர் விருதை பெற்றுக் கொண்டனர்.

7 விருதுகளை வென்ற ‘ஒப்பன்ஹெய்மர்’ – கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம். அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார்.

‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது. ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து விருதுகளை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’.சிறந்த பாடல்

13 பிரிவுகளில் போட்டியிட்ட ஓபன்ஹெய்மர் 7 விருதுகளை வென்ற நிலையில், 8 பிரிவுகளில் போட்டியிட்ட பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பார்பி திரைப்படம் வெறும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை மட்டும் வென்றது. 2வதாக அதிக ஆஸ்கர் விருதுகளை புவர் திங்ஸ் படம் தான் தட்டிச் சென்றது.

Tags :
Advertisement