மூலிகைகளும், பயன்களும்!
முன்னொரு காலம் வீட்டுக்கு வீடு அப்ப்பா என்ற தாத்தா முதல் அம்ம்மா என்ற பாட்டிமார்கள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த வலி மற்றும் நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது. இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.
பொதுவாக அழகு குறிப்புகளில் சோற்றுக் கற்றாழை, செம்பருத்தி பூ, கார்போக அரிசி, மருதாணி, போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதை பார்த்திருப்போம். இந்தப் பொருட்களால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வோமா?
வல்லாரை- வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை தரும் தன்மையை கொண்டது.
சோற்றுக்கற்றாழை- வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது
பொன்னாங்கண்ணி - கூந்தலுக்கு கருமையான நிறத்தை கொடுக்கும்.
செம்பருத்தி பூ - கூந்தலுக்கு கருமையான நிறத்தை கொடுக்கும்.
கீழாநெல்லி __மருத்துவ குணம் கொண்டது.
குப்பைமேனி -பொடுகு மற்றும் கரப்பானை கட்டுப்படுத்தும்.
துளசி - பேன் மற்றும் பொடுகை கட்டுப்படுத்தும்.
அரைக்கீரை -கூந்தலுக்கு இரும்புச் சத்தை கொடுக்கும்.
கருவேப்பிலை -இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ நிறைந்தது.
மருதாணி -நிறத்தை குளிர்ச்சியை கொடுப்பதோடு கூந்தலை ஒரே சீராக வைக்கும்.
நில ஆவாரை - இது கூந்தலை கருமையாக்கும் தன்மை கொண்டது.
பொடுதலை - பொடுகு தலையை தூய்மையாக்கி கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்ட மூலிகை.
அருகம்புல் - அருகம்புல் தலைக்கு நல்ல குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும்.
சம்பங்கி விதை - இது கூந்தலை கண்டிஷனிங் செய்வதோடு மட்டுமின்றி நன்றாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் கூந்தல் வளர உதவுகிறது. இதை கார்போக அரிசி என்றும் கூறுவர்.
வெந்தயம் - குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது பொடுகை நீக்கும்.
நெல்லிக்காய் - குளிர்ச்சி மற்றும் மிகச் சிறந்த கண்டிஷனிங் தன்மை கொண்டது. கூந்தலை பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்