தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஹார்ட் சர்ஜன் டாக்டர் கே.எம்.செரியன் காலமானார்!

12:12 PM Jan 26, 2025 IST | admin
Advertisement

35 ஆயிரத்திற்கும் அதிகமான இதய அறுவைசிகிச்சைகள் செய்தவர். மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போக்ரேட்ஸ் பிறந்த கிரீஸ் நாட்டின் ஒரு கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரே இந்தியர் கே.எம். செரியன் . தமிழ்நாட்டை உலக வரைபடத்தில் உயர்த்தி வைத்ததில் டாக்டர் கே.எம்.செரியனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நம் நாட்டின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த சாதனையாளர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடி. செயலிழந்த எத்தனையோ இதயங்களை மீண்டும் துடிக்கச்செய்து, பலருக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவருமான கே. எம். செரியன் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

Advertisement

பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு தீடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணிவாக்கில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டியவர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடி. முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்குரியவராவார்.சென்னையில், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியவர் செரியன். அவருக்கு 2005ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.இந்த நிலையில், அவரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாததொரு பேரிழப்பாகப் பார்க்கப்பகிறது. அவரது மறைக்குவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ''படுக்கையில் சாய்ந்த அடுத்த நிமிடமே உறங்கிவிடுவேன். மருத்துவர் என்பதால், எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்புகள் வரும். இரவு தூங்கும்போது அழைப்பு வந்தால்கூட, பேசிவிட்டு மீண்டும் தூங்கி விடுவேன். என் தூக்கத்துக்கு இந்த போன் அழைப்புகள் தொந்தரவாக இருந்ததில்லை.நல்ல தூக்கம் வேண்டுமா... யாரைப் பற்றிய கெட்ட சிந்தனையும் கூடாது. ஒருவரைப் பற்றித் தவறாக எண்ணுவதால், நமக்கு என்ன நன்மை... நம்மிடம் ஒருவர் உதவி எதிர்பார்த்து அது நியாயமாக இருந்தால், அதைச் செய்யக்கூடிய பலம் நமக்கிருந்தால் நிச்சயமாக உதவலாம். இவையெல்லாம் மனதுக்கு அமைதியையும் நிறைவையும் கொடுக்கும். அவை நல்ல தூக்கத்தைக் கொண்டு வரும். 26 வயதில் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது முன்பின் தெரியாதவர்கள்கூட எனக்கு உதவினார்கள். என் அத்தியாவசியத் தேவைகளுக்கு அவை கைகொடுத்தன. அப்படி நானும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.''என்று சொன்னார்

இப்போது நிரந்தரமாக தூங்கி விட்ட டாக்டர் செரியனுக்கு ஆந்தை ரிப்போர்ட்ர் சார்பில் அஞ்சலி

Tags :
Cardiac surgerycoronary artery bypass surgerydoctorheart surgeonheart-lung transplantK. M. Cherianகே.எம்.செரியன்டாக்டர் செரியன்பைபாஸ் அறுவை சிகிச்சைமருத்துவர்
Advertisement
Next Article