டைரக்டர் விக்ரமன் மனைவியின் சிகிச்சைக்கு 15 ஸ்பெஷல் டாக்டர்களுடன் ஆஜர் ஆன ஹெல்த் மினிஸ்டர்!
90களில் குடும்ப உருப்பினர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த, ஆண்டுகள் பல ஆனாலுன் மறக்க முடியாத இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், விக்ரமன். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாக கேள்விப்பட்ட முதல்வரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் மா. சுப்பிரமணியன் விக்ரமன் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். அவருடன் 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் சென்று விக்ரமனின் மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரமன், முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. என்னுடைய மனைவி குணமடைந்தால் போதும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.
குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக விக்ரமனுக்கு இல்லத்தரசிகளை திரையரங்கிற்கு வரவழைக்கும் பெருமை உண்டு. தமிழில் பூவே உனக்காக, சூரியவம்சம், வானத்தைப்போல உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்தவரிவர். கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு எந்தப் படமும் இயக்கவில்லை. அது ஏனென்று விசாரித்தால், அதன் பின்னணியில் இருக்கும் சோகமான கதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இயக்குனர் விக்ரமின் மனைவி ஜெயப்ரியா நடனக் கலைஞர் என்பதால், பல மேடைகளில் நடனமாடியுள்ளார். ஆனால், இப்போது அவரால் உட்காரவோ நடக்கவோ முடியவில்லை.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விக்ரமன், ஜெயப்ரியா உடல் வலி காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், முதுகில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பின், அவரது கால்களை அசைக்க முடியாதுவாறு உணர்ந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவளுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் என்று தெரிய வந்தது. தவறான சிகிச்சை காரணாமாக நரம்பு பாதிக்கப்பட்டதால் நடக்கவோ எழுந்திருக்கவோ முடியவில்லை.
இதையடுத்து, தனது மனைவிக்கு இருக்கும் இந்த பிரச்சனையை தீர்க்க விக்ரமன் தனது பாதி சொத்தை விற்றுள்ளார். அதன் பின்னர், செய்வதன்றி தவித்த விக்ரமனுக்கு அவ்வப்போது, திரையுலகைச் சேர்ந்த பலருக்கு இலவச மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளை வழங்கி வந்தனர்.
தற்போய்ஜி இறுதியாக, விக்ரமன் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். விக்ரமனின் கோரிக்கையை செவிமடுத்து இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று பரிசோதனை செய்தனர்.அப்போது, ஜெயப்பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் அவரை எழுந்து நடக்கவைப்பதற்கான மேல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரியாவின் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவும் என அமைச்சர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.