For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உயர்கல்விகளை கேலியாக்கும் HCL Techbeeயை அரசே ஆதரிக்கலா?

06:54 PM Jul 16, 2024 IST | admin
உயர்கல்விகளை கேலியாக்கும் hcl techbeeயை அரசே ஆதரிக்கலா
Advertisement

தாவது வேலை செய்வதற்குப் படிப்புத் தேவையில்லை. வேலை செய்வதற்கான எண்ணமும் அறிவும் போதும் என்ற மிகவும் ஆபத்தான கருத்துருவாக்கத்தை செயல்படுத்துவது தான் Zoho Schools மற்றும் HCL TECHBEE நிறுவனங்களின் நோக்கமாகும். ஏற்கனவே பொறியியல் பட்டப்படிப்பு படிப்பது பயன் தராது போன்ற கருத்துருவாக்கத்தை பொதுமக்கள் எண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பதிய வைத்தனர். இப்பொழுது இது போன்றத் திட்டங்களை செயல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். தனி நிறுவனங்களாய் அவர்கள் செயல்படுவதே ஆபத்தென்றால் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும் அவர்களுடன் கைக்கோர்த்திருப்பது என்பது உள்ளபடியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Advertisement

1) ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகுப் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வினை நீக்கினார் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள். பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொறியாளராகவும், மருத்துவராகவும் ஆயினர். பின்னர் NEET எனும் சதி மருத்துவராகும் கனவைப் பறித்ததும் மட்டுமல்ல மாணவர் மற்றும் பெற்றோர்களின் உயிர்களையும் குடித்துக் கொண்டிருக்கிறது. அதனை நீக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடுமையாக முயற்சித்து வரும் வேளையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL Techbee நிறுவனத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தேர்வு முகாம் நடத்துவது அரசின் NEET எதிர்ப்புக் கொள்கைக்கு முரணானது.

Advertisement

2) இவர்கள் பயிற்சித் தரும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த மாணவரின் கல்வித் தகுதி என்ன? நாம் தான் வருமானம் ஈட்டத் தொடங்கிவிட்டோமே. அனுபவங்களின் அடிப்படையில் வேலைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து அதற்கு மேல் பட்டப் படிப்பு படிக்காமல் போனால் என்னவாகும்? குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா? பதவி உயர்வு கிடைக்குமா? பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவியை அடைய முடியுமா?

3)இவர்கள் உருவாக்குவது வேலைக்காரர்களைத் தான் தவிர அதிகாரப்பூர்வ பொறியாளர்களை அல்ல!

4) தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்ற அண்ணா பல்கலைக்கழகம் தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தப் பிறகு உலகத் தர வரிசைகளில் முன்னுக்கு வந்துள்ளது. அதன் தரம் உயர்ந்திருக்கிறதென்றால் மாணவர்களின் தரம் உயர்ந்திருக்கிறது எனப் பொருள். இங்கு இருக்கும் பொறியியல் படிப்புகளில் போதாமையும், இடைவெளியும் இருக்கிறதா எனக் கேட்டால், ஆம்! இருக்கிறது என்பது தான் உண்மையான பதில். அதனை களைவதற்குத் தான் சிந்தித்து திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டுமே தவிர இப்படி மாற்று எனச் சொல்லி சதி நோக்கோடு செயல்படுவோரோடு கைக்கோர்க்கக் கூடாது.

5) 12 ஆம் வகுப்பில் 75% கணிதத்தில் மதிப்பெண் எடுத்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுலேயே அந்த மாணவருக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் பொறியியல் படித்து விட முடியுமே! தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் அவர்கள் படிக்கும் போதே திறன்களை மேம்படுத்த இப்போது இருக்கும் திட்டங்களைப் போல இன்னும் அதிகமான கூர் செய்யப்பட்ட திட்டங்களை செயல் படுத்தலாமே!

6) பட்டப் படிப்புகளில் (Gross Enrollment Ratio in Higher Education) மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு மாநிலம் முன்னிலையில் தற்போது இருக்கிறது. இது போன்றத் திட்டங்களில் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்பட்டால் அந்த விகிதங்கள் மிக விரைவாக குறைந்து தமிழ்நாடு வெகுவாகப் பின்னுக்குத் தள்ளப்படும்.

7) இணைய வழியில் படித்து சான்றிதழ் பெறும் இளங்கலைப் பட்டங்களை அரசுகளும், தனியார் நிறுவனங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் பட்டங்களாக கருதுவார்களா?

8) Early Career Program எப்படி உயர்கல்வி தேர்வு முகாமாகும்?

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL Techbee நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்திருக்கும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Tags :
Advertisement