ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா !
ஐநா வேண்டுகொள் விடுத்ததைக் கண்டு கொள்ளாமல் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா அந்த தாக்குதலுக்கு உயிரிழந்தார் என இஸ்ரேலின் பல ஊடகங்கள் தெரிவித்தது.அப்போது ஈரானின் டஸ்நிம் ஏஜென்சி தலைவர் நஸ்ரல்லா பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவித்தனர். அதன் பின் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
நேற்று நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் நஸ்ரல்லாவின் மகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தற்போது, ஹசன் நஸ்ரல்லாவும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்பு குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு எந்த ஒரு தகவலும் இதுவரை அறிவிக்கவில்லை.லெபனானில், சமீபத்தில் நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு காரணம் இஸ்ரேல் தான் என கூறி ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கினார்கள்.
இந்த தாக்குதலில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.மறுமுனயில், இந்த போரில் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் போரை நிறுத்துவதற்கு பேச்சு வார்த்தையில் முற்பட்டு வருகின்றனர். ஆனால், அதற்கு இஸ்ரேல் ஹிஸ்புல்லாக்களை மொத்தமாக அழிக்கும் வரையில் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என கூறி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.