தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஹாலிவுட் ஆஸ்கார் வின்னர் ஆக்டரஸ் மேகி ஸ்மித் காலமானார்!

04:29 PM Sep 28, 2024 IST | admin
Advertisement

ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மேகி ஸ்மித். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், மக்களுக்கு மத்தியில் இவருடைய பெயரை நீங்காத இடத்தில் வைத்திருக்க உதவிய படம் என்றால் ஹாரி பாட்டர் தான். இந்த படத்தில், அவர் டித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் அவரை பெரிய அளவில் பிரபலமாக்க உதவி செய்தது.இது குறித்து ஒரு பேட்டியில் அவர், “ஹாரி பாட்டர் படங்கள் எனக்கு பென்சன் போன்றவை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

மார்க்ரெட் ஸ்மித் என்ற இயற்பெயரை கொண்ட அவர் திரைப்படங்களுக்காக டேம் மேகி ஸ்மித் என்ற பெயரை தேர்வு செய்துகொண்டார். தனது சக நடிகரான ராபர்ட் ஸ்டீபன்ஸை 1967ல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள்.

Advertisement

நடிகை என்பதை தாண்டி மேகி ஸ்மித் நிஜ வாழ்க்கையில் நல்ல உள்ளம் கொண்டவர். ஏனென்றால், ஹாலிவுட் சினிமாவில் சில பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுப்பது, பணம் கேட்டு உதவிகோரி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி செய்வது என பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார். இப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட மேகி ஸ்மித் ரசிகர்களை கண்ணீரை கரைய வைத்து மண்ணைவிட்டு மறைந்துள்ளார்.

89-வயதான இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தார்கள். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Tags :
actressHarry Potter’s Beloved ProfessorhollywoodMaggie Smithoscar winnerPassed Away |நடிகைமேகி ஸ்மித்ஹாலிவுட்
Advertisement
Next Article