தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

செயின்ட் ஜார்ஜ் கோட்டை அசெம்பிளிக்கு ஹாப்பி பர்த் டே👣

07:51 AM Jan 09, 2024 IST | admin
Advertisement

தே - ஜனவரி 9, 1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921). அதாவது இந்த புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George),தான் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும் கொஞ்சம் விரிவாக்ச் சொல்வதானால் .1600ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர்.

Advertisement

அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் பிரான்சிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து, ஒரு பொட்டல்வெளியை விலைக்கு வாங்கினார். அங்கு போர்ட் ஹவுஸ் என்ற சிறிய கட்டிடத்தை கட்டினார். இதனைத் தொடர்ந்து ஒரு துறைமுகமும், கோட்டையும் கட்டப்பட்டன. இந்த கோட்டை 1640ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ந் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அது புனித ஜார்ஜ் நினைவு தினம் என்பதால் அந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிட்டனர். அந்த கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

Advertisement

வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும். இந்தக் கோட்டை யில் தான். தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர். இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில்,1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. ஆர்தர் வில்லியம் பேட்ரிக் என்ற பெயர் கொண்ட கன்னாட் கோமகன் (Duke of Connaught) இதை தொடங்கி வைத்தார்.

அதாவது 1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் ‘சென்னை மாகாண சட்டமன்றம்’ 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்டதாக இது இருந்தது.பின்னர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு இதே ஜனவரி 9-ம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

அன்றில் இருந்து இன்றுவரை ஆட்சியாளர்கள் அங்கு அமர்ந்து வருகிறார்கள்...(இடையில் 16-03-2010 முதல் 15-05-2011 வரை தவிர)

மேலும் இந்த ஜார்ஜ் கோட்டைதான் கிழக்கிந்திய கம்பெனியர்கள் முதன் முதலில் (1644 ல்) சென்னையில் உருவாக்கிய பெரிய கட்டிடம் என்பதும் இந்த கட்டிட திறப்பு விழா புனித ஜார்ஜின் பிறந்த நாளன்று(23-04-1644) நடைபெற்றதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை (st.George fort) என அழைக்கப்படுகிறது என்பது அடிசினல் தகவல்..

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
assemblyhappy birthdaySt. George Forttn assembly
Advertisement
Next Article