மத்திய அரசின் ரேஷன் பொருட்கள் வீணாவதில் குஜராத் முதலிடம்!
மத்திய அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களில் 36.38 சதவீதம் வீணாகிறது.போலி ரேஷன் கார்டுகளின் பெருக்கம் இதற்கு முக்கிய காரணம். மேலும் சரியான முறையில் உணவு தானியங்களை இருப்பு வைக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் இன்னொரு காரணம் என்றெல்லாம் முன்னரே தகவல் வந்த நிலையில் இப்போது வெளியான தகவல்கள் இதோ:
சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) நடத்திய ஆய்வின்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் அரசுக்கு ரூ.69,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும்போது ஏற்படும் லீக்கேஜ் பிரச்சனையால் 2022-23 காலகட்டத்தில் நாடு முழுவதும் 17 மில்லியன் டன் அரிசி மற்றும் 3 மில்லியன் டன் கோதுமை வீணடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது
லீக்கேஜ் விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் குஜராத், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளன
ஆகஸ்ட் 2022 மற்றும் ஜூலை 2023-க்கு இடையில் இந்த திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட 71 மில்லியன் டன் தானியங்களில் லீக்கேஜ் பிரச்சனையால் 28% வீணடிக்கப்பட்டுள்ளது
81.3 கோடி குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கும் PMGKAY திட்டத்துக்கான 2024-25 நிதியாண்டின் செலவு ரூ.2.12 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது