For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகின் மிக வயதான ஆமைக்கு குவியும் வாழ்த்துகள்..:-191-வது பிறந்தநாளை எட்டியது!

06:10 PM Dec 03, 2023 IST | admin
உலகின் மிக வயதான ஆமைக்கு குவியும் வாழ்த்துகள்    191 வது பிறந்தநாளை எட்டியது
Advertisement

ர்வதேச அளவில் அதிக நாள் வாழும் உயிரினம் எதுவென நினைக்கிறீர்கள்?

Advertisement

ஆமை?

யானை?

Advertisement

திமிங்கிலம்?

இவை மூன்றும் பொதுவாக அதிக வருடங்கள் வாழும் என்பது உண்மைதான். ஆனால், இந்த நொடி உலகின் அதிக வயதான உயிரினம் க்ரீன்லாந்து ஷார்க்தான். இதன் வயது 516 வருடங்கள் என 2017-ல் நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலில் வெளியான ஓர் ஆவணப்படம் சொன்னது. ஆனால், இதன் செல்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் வயது 500 எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. 272 தான் என்றார்கள். ஆனாலும் அதுதான் உயிருடன் இருக்கும் அதிக வயதான உயிரினம் என்ற ரெக்கார்டு மாறவில்லை..!

இந்நிலையில் உலகின் மிகவும் வயதான ஆமை என்ற சாதனையை தக்க வைத்துள்ள செயின்ட் ஹெலேனா தீவில் வசித்து வரும் ஜோனதன் ஆமை தனது 191வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.நிலத்திலும் நீரிலும் வாழும் திறனைப் பெற்றிருக்கும். நிலத்திலும் நன்னீரிலும் வாழும் ஆமைகளை tortoises எனவும் கடல் நீரிலும் கடற்கரையிலும் வாழும் ஆமைகளை Turtle எனவும் அழைப்போம் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் ஆமைகள் இந்த உலகில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?டைனோசர் காலத்தில் வாழ்ந்த சில உயிரினங்கள் தான் இப்போதும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பெரும் அழிவுகளில் இருந்த தப்பிப்பிழைத்த அந்த சில உயிரினங்களில் ஆமையும் ஒன்று. ஆமைகள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன. இது பாம்புகள், பல்லிகள், பறவைகளை விட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.ஐரோப்பிய குடும்பங்கள் ஆமைகளை செல்லபிராணிகளாக வளர்ப்பர். அப்படி வளர்க்கப்படும் செல்லபிராணிகள் பாட்டி முதல் பேத்தி வரை தலைமுறைகள் கடந்து அந்த வீட்டின் உறுப்பினராக இருக்கும். 1835ல் சார்லஸ் டார்வின் தனது ஆய்வுக்கு பயன்படுத்திய ஹாரியட் ஆமை கடந்த 2006ம் ஆண்டு தான் மறைந்தது. இதற்கு 176 வயது இருக்கும் என கணித்து இருந்ததாக செய்தி வந்ததெல்லாம் நினைவிருக்கும்.

இம்மாதிரி ஆமைகளின்  சராசரி வாழ்நாள் சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.கடல் ஆமைகள் உணவாகாமல் தப்பித்தால் இந்த 150 ஆண்டுகளை கடப்பது மிகவும் எளிதானதாகும். அதே சமயம் நிலத்தில் வாழும் ஆமைகளில் செச்சல்ஸ் மற்றும் கெலபாகஸ் ஆமைகள் சுமார் 150 முதல் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை ஆகும். உலகில் இது போன்று வளர்ப்பு ஆமைகள் ஏராளமாக இருக்கும்,

இந்நிலையில், செயின்ட் ஹெலேனா தீவில் வசித்து வரும் ஜோனாதன் என்ற ஆமை மிகவும் உலக புகழ்வாய்ந்தது ஆகும்.பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் 1821ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்டு உயிரிழந்தார். அதே இடத்தில்தான் ஜொனாதன் என்ற ராட்சத ஆமையும் தற்போது வசித்து வருகிறது.

இந்த ஆமை எப்போது பிறந்தது என்பது தொடர்பான ஆவணங்கள் இல்லை என்றாலும் இந்த ஆமை 1832 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த 1882 ஆம் ஆண்டு செயின்ட் ஹெலேனா தீவின் ஆளுநராக பதவி வகித்த சர் வில்லியம் கிரே வில்சன் என்பவர் மூலமாக ஜோனாதன் இந்த தீவிற்கு கொண்டுவரப்பட்டது.

அப்போது முதல் இப்போது வரை ஆளுநர் மாளிகையிலேயே ஜோனாதன் வசித்து வருகிறது. ஜோனாதன் ஆமையின் பிறந்த தேதி சரிவர தெரியாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மூன்றாம் தேதி ஆமையின் பிறந்த தினமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 191 வது பிறந்த நாளை இன்று ஜோனாதன் கொண்டாடியுள்ளது. இதையொட்டி மூன்று நாட்களுக்கு ஜோனாதன் ஆமையை பொதுமக்கள் நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் 191 வயது என கணக்கிடப்பட்டாலும் கூட, இந்த ஆமைக்கு 200 வயதிற்கும் மேல் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது நல்ல உடல்நிலையோடு ஜோனாதன் ஆமை இருந்து வருவதாகவும், மேலும் சில ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் ஆமை இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரண்டு நூற்றாண்டுகள் கடந்து மூன்றாவது நூற்றாண்டிலும் ஜோனாதன் ஆமை உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக விலங்கின ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே , உலகின் மிகப் பழமையான நிலத்தில் வாழும் விலங்கு என்ற கின்னஸ் உலக சாதனை பட்டத்தை ஜொனாதன் வென்றார். மிகவும் பழமையான ஆமை என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார்.

ஜொனாதன் குறித்து, ஓய்வுபெற்ற விலங்கு மருத்துவரும், ஜொனாதனின் தற்போதைய முக்கிய பராமரிப்பாளருமான ஜோ ஹோலின்ஸ் கூறுகையில்,"1832ஆம் ஆண்டு ஜொனாதன் பிறந்தார் என்பதை நினைத்து பாருங்கள். அப்போது, ஜார்ஜியன் ஆட்சிக்காலம் இருந்தது. உலகம் எப்படி மாறிவிட்டது. உலகப்போர், பிரிட்டீஷ் பேரரசின் வீழ்ச்சி, எத்தனை கவர்னர்கள், மன்னர்கள், ராணிகளை ஜொனாதன் கடந்து வந்திருக்கிறார். இது மிகவும் அசாதரணமானது" என்றார். ஆக கின்னஸ் சாதனை படைத்துள்ள ஜோனாதன் தனது 191-வது பிறந்தநாளில் அந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து ஜோனதன் ஆமைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் ஜொனாதன் இன்னும் பல ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக வாழ்வார் என நம்பும் அதே வேளையில், செயின்ட் ஹெலினா நகர அதிகாரிகள், அவரின் மரணத்திற்கு பின்னான இறுதி மரியாதை குறித்த திட்டங்களை ஏற்கனவே தயாரித்துள்ளனர். ஜொனாதனின் ஓடு பகுதியை வருங்கால தலைமுறையினரின் பார்வைக்காக பாதுகாத்து வைக்க திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement