தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குரூப் -1 தேர்வு அறிவிப்பு: -முழு விபரம்!

01:16 PM Mar 28, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

Advertisement

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்று முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம்.

இந்த குரூப் – 1 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது?

டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வானது என்னென்ன பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்று பார்ப்போம்.பதவிகள்: துணை கலெக்டர்காவல்துறை துணை கண்காணிப்பாளர்உதவி வணிகவரி ஆணையர்உதவி இயக்குனர் (பஞ்சாயத்து)துணை சரகப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர்.

குரூப் – 1 தேர்வுக்கான வயது வரம்பு என்ன?

குரூப்-1 தேர்வுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 35 வயது வரை TNPSC தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி குறித்து பேசுகையில், குரூப் -1 மற்றும் குரூப்-2 -க்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வரி விதிப்பு சட்டங்களில்‌ டிப்ளமோ பட்டம் பெற்றவர்களும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் – 1 தேர்வு எத்தனை கட்டங்களாக நடத்தப்படும்?

குரூப் – 1 தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு: முதல்நிலைத் தேர்வானது 300 மதிப்பெண்களை கொண்ட எழுத்து முறை தேர்வு ஆகும். தேர்வு 3 மணிநேரம் நடைபெறும். இதில், மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில், 150 கேள்விகளுக்கு சரியாக விடை அளித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வு எழுத முடியும். முதன்மைத் தேர்வு: மெயின் தேர்வு மூன்று பொதுஅறிவு தாள்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்களை உள்ளடக்கியது. எனவே, மொத்தம் 3*250 = 750 மதிப்பெண்களை கொண்டது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நேர்முகத்தேர்வு: 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் இருந்து மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். மொத்த மதிப்பெண்கள் 750 100 = 850 ஆகும். பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 340 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவினர்கள் குறைந்தபட்சம் 225 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 1 -க்கான பாடத்திட்டம்  என்ன?

குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்ட தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாடம் 1 - பொது அறிவியல் - 15பாடம் 2 - நடப்பு நிகழ்வுகள் - 15பாடம் 3 - இந்திய புவியியல் -10பாடம் 4 - இந்தியாவின் வரலாறும் பண்பாடும் - 15பாடம் 5 - இந்திய அரசியலமைப்பு - 20பாடம் 6 - இந்திய பொருளாதாரம் - 15பாடம் 7- இந்திய தேசிய இயக்கம் - 15பாடம் 8 - தமிழ்நாடு வரலாறு - 40பாடம் 9 -தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சம்மோக அரசியல் இயக்கங்கள் - 30பாடம் 10 - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்திக்கூர்மை) - 25முதன்மை எழுத்து தேர்வு: குரூப் 1 மெயின் எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம் இங்கே: கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம்: மொழிபெயர்த்தல் சுருக்கி வரைதல் பொருள் உணர்திறன் சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் கடிதம் வரைதல் தமிழ் மொழி அறிவு தாள் I, II மற்றும் III – பாடத்திட்டம்:தற்கால இந்திய வரலாறு மற்றும் பண்பாடு இந்தியாவிலும் தமிநாட்டிலுமுள்ள சமூக பிரச்சனைகள் திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவை பாதிக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் தோன்றுகின்ற அரசியல் போக்கு.இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் தமிழ் சமூகம் – பண்பாடு மற்றும் பாரம்பரியம் தமிழ்நாட்டின் முக்கிய சிறப்பம்சங்களுடன் இந்தியாவின் புவியியல் அமைப்பு சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை இந்திய பொருளாதாரம் – நடப்பு பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம்.

எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்க வேண்டும்?

பொது அறிவியல்: பொது அறிவியலுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை மட்டும் படித்தால் போதுமானது. கூடுதல் தகவல்களுக்கு அரிெகெண்ட் ஜென்ரல் நாலேஜ் என்ற ஆங்கில புத்தகத்தை பார்வையிடலாம். நடப்பு நிகழ்வுகள்: தமிழில் சிறந்த நாளிதழை தினமும் பார்வையிடவும். இது தவிர, ஐஏஎஸ் அகாடமி வெளியிடக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிடலாம். இந்திய புவியியல்: 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள இந்திய புவியியல் என்ற பகுதியை மட்டும் படித்தால் போதுமானது. இந்தியாவின் வரலாறும் பண்பாடும்: 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரலாறு சம்பந்தமான பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் படிக்க வேண்டும்.மேலும், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு-டாக்டர் சங்கர சரவணன் எழுதிய புத்தகத்தையும் பயன்படுத்தவும்.இந்திய அரசியலமைப்பு:6-வது முதல் 10 ஆம் வகுப்பு வரை குடிமையியல், 11 மற்றும் 12ஆம் வகுப்பு அரசியல் புத்தகம் பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகளை மட்டும் படிக்கவும்.மேலும் தேவைப்படடின் இந்தியன் பொலிட்டிக்கல் லட்சுமிகாந்தன் புத்தகத்தை அல்லது இந்திய அரசியலமைப்பு சந்திரசேகரன் புத்தகத்தையும் பயன்படுத்தலாம்இந்திய பொருளாதாரம்: ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பொருளாதார பகுதிகளை படிக்கவும். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொருளாதாரம் புத்தகத்தை பாடத்திட்டத்தில் உள்ளவாறு படிக்கலாம்.இந்தியதேசிய இயக்கம்: ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வரலாறு மற்றும் 11, 12-வது வரலாறு புத்தகம் பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை படிக்கவும். அரிஹந்த் ஜெனரல் நாலேஜ் என்ற புத்தகத்தில் உள்ள அறிவியல், அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல் ஆகியவற்றையும் பார்வையிடலாம். திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்தி கூர்மைக்கு): 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டத்தில் உள்ள கணக்குகளை பார்க்கவும். இது கடினமாக இருக்கும் எனில் கடந்த பழைய டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களில் உள்ள கணக்குகளை போட்டு பார்க்கவும். கணியன் பூங்குன்றன் என்ற கணிதபுத்தகத்தை படிக்கவும் பாகம் 1 மற்றும் பாகம் 2.

TNPSC குரூப் 1 தேர்வை தமிழில் எழுதலாமா?

குரூப் 1 தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் எழுதலாம். ஆனால், நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தமிழ்வழியில் தேர்வு செய்தால் கடைசிவரை தமிழ் வழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும். ஆங்கிலத்தை தேர்வு செய்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும். குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உங்களுக்கான விருப்ப மொழியை தேர்வு செய்யலாம்.

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு?

குரூப் 1 தேர்வுக்கு பதிவுக்‌ கட்டணமாக ரூ.150 மற்றும் முதனிலைத்‌ தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை எழுத்துத்‌ தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன்‌ வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்‌.

எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்?

குரூப் 1 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும். இது தவிர போனஸ், PF, வருடம் தோறும் ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

நிலவளம் ரெங்கராஜன்

 

Tags :
examexam patternGroup-1notificationqualificationsyllabusTN Govt JobTNPSC GROUP-I
Advertisement
Next Article