தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு!

05:58 PM May 10, 2024 IST | admin
Advertisement

காலநிலை மாற்றம், அதிதீவிர வெயில், மழைநீர் சேகரிப்பில் அரசின் மெத்தனம் என பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை கோடை காலத்தில் வெகுவாக நீர்நிலைகள் வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகளில் வெறும் 50% மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. அதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டுபோய்விட்டது. தலைநகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க நீலகிரி தொடங்கி வீராணம் வரை பல ஏரிகள் வேகமாக வறண்டு கொண்டிருக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தமிழகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டுவரும் சம்வங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. அதேபோல் வெப்பத்தின் தாக்கமும் கடுமையாக இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளன. பெரும்பாலான அணைகள் வறண்டு விட்டன. பரிசல் பயணிக்க வேண்டிய அணையில், பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது. குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்போதே இப்படி என்றால், வரும் காலத்தை, எப்படி சமாளிப்பது என்பது, பொதுமக்களின் கேள்வி.

Advertisement

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் தருமபுரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தருமபுரியில் நிலத்தடி நீர் கிடைக்கும் சராசரி ஆழம் கடந்த ஆண்டு ஏப்ரலில் 5.78 மீட்டர் என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 8.98 மீட்டர் அளவுக்கு கீழே சென்றுள்ளது.அதேபோல், நாமக்கலில் 6.15 மீட்டரிலிருந்து 9.34 மீட்டராகவும், கோவையில் 9.4 மீட்டரிலிருந்து 10.85 மீட்டராகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1 முதல் 2 மீட்டர் வரை சரிந்துள்ளன. சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் 0.5 மீட்டர் குறைந்துள்ளது.

Advertisement

அதேசமயம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

Tags :
Ground water levellowmany districtsTamil Nadu
Advertisement
Next Article