For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்திய அஞ்சல் துறையில் கிராமின் டக் சேவக் எனப்படும் ஜிடிஎஸ் பணிவாய்ப்பு!

01:21 PM Feb 15, 2025 IST | admin
இந்திய அஞ்சல் துறையில் கிராமின் டக் சேவக் எனப்படும் ஜிடிஎஸ் பணிவாய்ப்பு
Advertisement

ந்திய அஞ்சல்துறையில் 21,413 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் கூடிய இந்த பணியிடங்களுக்கு எக்சாம் எதுவும் வைக்கப்படாது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால் துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

ஆம்.. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் கிராமின் டக் சேவக் எனப்படும் ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியிடங்கள் விவரம்:

பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (BPM), அஸ்சிஸ்ண்டன் பிரஞ்ச் போஸ்ட்மாஸ்டர் (ABPM), டக் சேவக் என மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் படித்து இருப்பது அவசியம். கணினி பற்றிய அறிவு இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.

சம்பள விபரம் :

பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பணிக்கு மாதம் ரூ.12,000/- to ரூ.29,380/- வரை வழங்கப்படும்.

உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ABPM / Dak Sevak - பணிக்கு ரூ.10,000/- to Rs.24,470/-வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு. அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தங்கள் விரும்பிய மாநிலத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள் /எஸ்.சி /எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தினம்

வரும் 03.03.2025-

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.gov.in/ இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Tags :
Advertisement