For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் – காங்கிரஸ் கண்டனம்!

02:03 PM Jul 22, 2024 IST | admin
ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள்  – காங்கிரஸ் கண்டனம்
Advertisement

அரசு ஊழியர்கள்ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான தடையை நீக்கி, மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்ட அரசாணையை சமூகவலைதளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Advertisement

பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துத்துவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி.இந்தநிலையில், கடந்த 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இப்போது மத்திய ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீக்கப்பட்டு, மத்திய அரசு நேற்று வெளியிட்ட முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் ,“மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து, 1948 பிப்ரவரியில் சர்தார் படேல், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார். அதைத் தொடர்ந்து, நல்ல நடத்தைக்கான உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்தத் தடை திரும்பப் பெறப்பட்டது. இதற்குப் பிறகும் கூட ஆர்எஸ்எஸ் நாக்பூரில் (ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில்) மூவர்ணகொடியை பறக்கவிடவில்லை.1966ல் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் 4ம் தேதிக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ்-ஸுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு அம்பலப்பட்டுவிட்டது. கடந்த 9ம் தேதி அன்று, 58 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இந்த தடை நடைமுறையில் இருந்தது.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement