அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்......
7 லட்சத்திற்கு மேலான படங்கள், பத்தாயிரத்துக்கு மேல் உள்ள ஓடிடி தளங்களின் அப்கள் போன்ற அத்தனை வசதிகளுடன் வந்து விட்டது கூகுள் ஸ்ட்ரீம் எனப்படும் ஒரு அற்புத சேவை.
டிவி வந்த பிறகு திரைப்படங்கள் மங்கின, டிடிஹெச் வந்தவுடன் கேபிள் டெலிவிஷன் மங்கி போனது, ஸ்மார்ட் டிவி வந்த பிறகு டிடிஹெச் மங்கி போனது பின்பு ஓடிடி வந்த பிறகு மேல் கூறிய அனைத்தும் மங்கி போய் இணைய வழி டிவி சேனல்கள் மற்றும் திரைப்படங்களுடன் வந்த பிறகு மீடியா மற்றும் சினிமா துறை ஆட்டம் கண்டது என்று சொல்வதற்குள் அடுத்த பெரிய விஷயம் தான் "கூகுள் ஸ்ட்ரீம்" எனப்படும் சேவை உலகம் முழுவதும் இந்தியாவில் கூட...... !
உலகத்தின் பெரிய இணைய ஜாம்பவானாக வலம் வரும் கூகுள் நிறுவனம் பல தொழில்களை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது. அதில் கூகுள் ஆண்ட்ராய்ட் உலக பிரசித்தம். கூகுள் தான் ஏற்கனவே குரோம் காஸ்ட் என்று ஒரு இரண்டாயிரம் ரூபாய் டிவைஸை கொண்டு வந்து உங்கள் மொபைல் போனில் இருந்து எதை வேண்டுமானாலும் உங்கள் டிவியில் பார்க்க முடியும் என்ற மாயாஜாலத்தை காட்டி மக்களுக்கு புரிய வைத்து அதற்குள் ஆண்ட்ராய்ட் டிவி எனப்பல சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றி இனிமேல் கேபிள், டிடிஹெச், டிவிடி, எதுவுமே வேண்டாம் வெறும் ஸ்மார்ட் டிவி மட்டும் போதும் என வந்த பிறகு இது போதாது இன்னும் கொஞ்சம் என அடுத்து வந்தது தான் கூகுள் டிவி. பன்னிரண்டாயிரம் ரூபாய் டிவி கூட ஆண்ட்ராய்ட் டிவியுடன் வந்ததால் பல வீடுகளில் கேபிள் டிடிஹெச் மற்றும் ஹோட்டல்களில் சர்விஸிகளை நிறுத்தி பெரிய இடியை இறக்கியது தான் கூகுள்.
பல ஓடிடி தளங்கள், பல ஸ்ட்ரீம் ஆப்ஸ், பல டிவி சேனல்கள் என தனி தனியாக இருக்கும் ஒரு அவலத்தை "லாஸ்ட் மைல்" சேலஞ் எனக்கூறுவார்கள். இந்த பிரச்சினையை கூகுள் இப்போது சத்தமே இல்லாமல் சிறப்பாக செய்தது தான்
"கூகுள் டிவி" .
ஆண்ட்ராய்ட் டிவிக்கும் கூகுள் டிவிக்கும் என்ன வித்தியாசம் என கேட்க நினைப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி வைத்து ஆண்ட்ராய்ட் டிவி வைத்திருந்தவர்களுக்கும் சாதாரண எல் ஈ டி டிவி மட்டும் வைத்திருப்பவர்களுக்கு ம் இந்த கனெக்டிங் பிளாட்பார்ம் தான் இந்த கூகுள் டிவி. இந்த டிவி பல லட்சம் திரைப்படங்கள் பல ஆயிரம் ஓடி டி தளங்களை ஒன்றிணைப்பது மட்டும் இல்லாமல் 800 இலவச டிவி சேனல்களை தருகிறது. கூகுள் பிளே ஸ்டார் மற்றும் கூகுள் குரோம் காஸ்ட் மற்றும் ஆண்ட்ராய்ட் டிவி மற்றும் கூகுள் டிவி வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மாஸ்ட்டர் சொல்யூஷன் தான் இந்த கூகுள் டிவி.
கூகுள் டிவி மூலம் உங்களை வீட்டு சி சி டிவி மற்றும் வீடியோ கால்கள் மற்றும் அனைத்து வகை டிவி சர்விஸ்களையும் இணைக்கும் ஒரு அற்புத பிளாட்பாரம் தான் இந்த கூகுள் டிவி. இந்த கூகுள் டிவி பார்ப்பதற்கு - ஸ்ட்ரீம் டிவைஸ் இல்லது ஸ்மார்ட் டிவி அல்லது உங்களின் ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிளின் ஐ போன் மூலமாகவும் கண்டுகளிக்க முடியும் என்பது எத்தனை பெரிய விஷயம் என்பதை நீங்கள் உபயோகித்து பார்த்த பிறகு தான் தெரிய வரும். இந்த கூகுள் டிவியால் விரைவில் பல டி டி ஹெச் நிறுவனங்கள் பே சேனல்களின் கொட்டம் அடங்கும் என்பது தவிர்க்க முடியாத ஒரு உண்மையாகும்.
என்னிடம் சாதாரண டிவி தான் உள்ளது, நான் பழைய டிவியை மாற்றித்தான் ஆகணுமா ?, எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க ஆந்தையார் அவர்களே என கேட்பதற்குள் மொபைல் / டேப்ளட் / போன் போன்ற ஸ்க்ரீனில் பார்க்க விரும்பாமல் பெரிய டிவிக்களில் பார்க்க விரும்புவர்களுக்கு கூகுள் டிவி டிவைஸை 4400 ரூபாய்க்கு ரிமோட் கண்ட்ரோல் உடன் பிளிப்கார்ட் தளத்தில் ஒரு முறை வாங்கிவிட்டால் உங்களுக்கு கூகுள் டிவியின் அத்தனை சேவையும் இலவசம் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் எடுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு டெக்னலாஜி இன்னோவேஷன் தான் இந்த கூகுள் டிவி.