தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பார்லிமெண்ட் எலெக்‌ஷன்:தேர்தல் கமிஷனுடன் கை கோர்க்கிறது கூகுள்!

08:00 AM Mar 13, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் கட்சிகள் உள்ளன.அதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளும் நிரந்தர சின்னம் கொண்டுள்ளன. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகள் களம் இறங்கினர். தமிழ்நாட்டில் மட்டும் 530 சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கினர்., வரும் தேர்தலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் வர இருக்கும் தேர்தல் குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை அடையாளப்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

Advertisement

இது குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் வலைப்பதிவில் ``கூகுள் தேடுபொறி தளத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு எவ்வாறு பதிவு செய்வது, எப்படி வாக்களிப்பது போன்ற தேர்தல் தொடர்பான முக்கிய தவல்களை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மக்கள் எளிதாக கண்டறிவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் நாங்கள் இணைந்துள்ளோம்.கொள்கைகளை செயல்படுத்துதல், பெரிய அளவில் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்துதல், தேர்தல் விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மை, தவறான தகவல்களை கட்டுப்படுத்த, விரிவான சூழலில் இணைந்து பணியாற்றுவது ஆகிய அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட உள்ளன.

Advertisement

அதாவது தற்போது பலரும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், அவற்றை அடையாளம் காண உதவும் வகையில் தனி முத்திரையிடும் செயல்முறையும் கொண்டு வரப்பட உள்ளது. மக்களை தவறாக வழிநடத்துவதை தடுக்க டீப்பேக் மற்றும் எடிட் செய்யப்பட்ட கன்டென்ட்களுக்கு எங்கள் விளம்பர கொள்கையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ட்ரீம் ஸ்கிரீன் போன்ற ஏஐ அம்சங்களுடன் உருவாக்கப்படும் யூடியூப் வீடியோ கன்டென்ட்களுக்கும் தனி முத்திரை காட்டும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. கூகுளின் சாட்பாட்டான ஜெமினியிலும் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எங்கள் கொள்கைகளை மீறும் கன்டென்ட்களை கண்டறிந்து அகற்ற, நிபுணர்கள் அடங்கிய மதிப்பாய்வாளர்கள் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றை நாங்கள் நம்பியுள்ளோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
AIAwarnessECelectionElection Commision of IndiaGooglevoters
Advertisement
Next Article