தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கூகுள் 'ஜெமினி' ஏஐ.,செயலி: தமிழ் உள்பட 9 மொழிகளில் வந்தாச்சு!

05:04 PM Jun 18, 2024 IST | admin
Advertisement

மிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய ஒன்பது மொழிகளில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான ‘ஜெமினி’ அறிமுகம் செய்யப்படுகிறது.

Advertisement

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்  என்னும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கூகுள் இந்த அறிவிப்பை ஜூன் 18ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த AI அம்சத்தை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது 9 இந்திய மொழிகளில் நாம் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.இதன் மூலம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜெமினியுடன் தாய்மொழியில் தகவல்களைக் கேட்டுப் பெறலாம் அல்லது தங்களின் பணிகளைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

கூகுள் அதன் ஜெனரேட்டிவ் AI சாட்போட் ஜெமினியின் மொபைல் செயலியை குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெமினி செயலி மற்றும் ஜெமினி அட்வான்ஸ்டு ஆகிய இரண்டும், கூகுளின் மிகவும் திறமையான AI மாடல்களுக்கான அணுகலைப் பயனர்களுக்கு வழங்கும், இப்போது ஒன்பது இந்திய மொழிகளில் கிடைக்கும். மேலும் பலர் தங்கள் விருப்பமான மொழியில் தகவல்களை அணுகவும் பணிகளை முடிக்கவும் உதவும். மேலும், கூகுள் ஜெமினி அட்வான்ஸ்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இதில் புதிய தரவு பகுப்பாய்வு திறன்கள், கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் ஆங்கிலத்தில் கூகுள் செய்திகளில் ஜெமினியுடன் அரட்டையடிக்கும் திறன் ஆகியவை அடங்கும்.இந்தியாவைத் தவிர, துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஆப் உங்களுக்குத் தேவையான உதவியைப் பெற தட்டச்சு செய்ய, பேச அல்லது படத்தைச் சேர்க்க உங்களை அனுமதிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் இந்த AI தொழில்நுட்பத்தை முதலில் Bard என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் "Gemini" என்று மறுபெயரிட்டு ஒரு வருடம் ஆன நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த AI முயற்சிகள் அனைத்திற்கும் 'ஜெமினி' என்ற பெயரையே முதன்மை பிராண்டாகக் கொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது. இனி இந்த ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் டைப் செய்தோ அல்லது வாயால் பேசியோ அல்லது படத்தை அனுப்பியோ உங்களுடைய கேள்விகளை கேட்க முடியும்.

உதாரணமாக பஞ்சரான டயரை எப்படி மாற்றுவது? என்பதற்கான வழிமுறைகளைப் பெற, அந்த டயரின் படத்தை எடுத்து ஜெமினிக்குக் காட்டலாம். அதேபோன்று பிறந்தநாள் விழா கார்டுகளில் என்ன எழுதலாம்? என்பதற்கான உதவி குறிப்புகளையும் நீங்கள் ஜெமினி AI மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனர்கள் ஜெமினியை ஆப்-ஐ தங்கள் உதவியாளராக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பவர் பட்டனை அழுத்தியோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோன்களில் ஸ்வைப் செய்தோ அல்லது "hey google" என்ற சொல்லை சொல்லியோ கூகுள் அசிஸ்டன்ட்டை செயல்படுத்தும் இடங்களில் எல்லாம் ஜெமினியை பயன்படுத்தலாம். டைமர் அமைத்தல், விழிப்புணர்வு நினைவூட்டல்கள் அமைத்தல் போன்ற கூகுள் அசிஸ்டன்ட்-இல் உள்ள அனைத்து அம்சங்களும் ஜெமினி ஆப் மூலம் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல செயல்பாடுகளை செய்யவும் கூகுள் நிறுவனம் பணியாற்றி வருகிறது.கணிதம், இயற்பியல், வரலாறு, மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும். 'ஜெமினி' ஏஐ., செயலியால் கோடிங் எழுதவும் முடியும்.

Tags :
AI App. Googlegemini aiஏஐகூகுள்ஜெமினி
Advertisement
Next Article