For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரஷ்யா குறித்து தவறான கருத்துக்களை நீக்காத கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம் -ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!

08:08 AM Dec 21, 2023 IST | admin
ரஷ்யா குறித்து தவறான கருத்துக்களை நீக்காத கூகுளுக்கு ரூ 421 கோடி அபராதம்  ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு
Advertisement

ன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது வரை ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

Advertisement

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும், மேற்கத்திய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இதனிடையே இது குறித்து பல்வேறு தகவல்களும் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் ரஷ்யா குறித்து தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் இருந்ததாகவும், அதனை நீக்க கோரி ரஷ்யா கூகுள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால், ரஷ்யா குறித்து தவறான கருத்துக்களை நீக்காத ஆல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான போரை சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்யா கூறி வருகிறது. ஆனால் கூகுள் நிறுவனம் இதனை பயங்கரவாத, ஆதிக்க போராக குறிப்பிட்டுள்ளதாக ரஷ்யா நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இது போன்ற கருத்துக்களை நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இதன் காரணமாக கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என கூறி, அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement