தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கூகுள் அடடே அப்டேட்.- மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் நவீன AI அறிமுகம்.!

01:26 PM Dec 07, 2023 IST | admin
Advertisement

டிஜிட்டல் உலகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு(AI) மிக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. சாதனங்கள் தொடங்கி தொழிற்நிறுவனங்கள் வரை அனைத்திலும் AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் முன்னணி தேடுதளமான கூகுள் இந்தியாவில் முதன்முறையாக AI உதவியுடன் Search செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி அது இன்னமும் பிரபலமடையாத சூழலில் கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்து மிரட்டி உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது.

Advertisement

ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இது கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற சிக்கலான பாடங்களில் விளக்கம் அளிப்பதிலும் சிறப்பாக செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

ஜெமினி 1.0 மூலம் பைத்தான் (Python), ஜாவா (Java), சி (C )போன்ற உலகின் மிகவும் பிரபலமான கோடிங் மொழிகளைப் புரிந்துகொள்ளவும், விளக்கவும் மற்றும் உருவாக்கவும் முடியும். கூகுளின் ஜெமினி எஐ 1.0 ஆனது ஜெமினி அல்ட்ரா, ஜெமினி ப்ரோ மற்றும் ஜெமினி நானோ ஆகிய மூன்று வெவ்வேறு அளவுகளில் உள்ளது.இவை ஒவ்வொன்றும் பல சிக்கலான வேலைகளை செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

இந்த ஜெமினி எஐ 1.0 கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ கருவியான பார்டில் இயங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பார்ட் தொடங்கப்பட்டதிலிருந்து அதில் செய்யப்படும் மிகப்பெரிய அப்டேட் ஆகும். இது 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கிலத்தில் கிடைக்கும்.

மேலும் எதிர்காலத்தில் புதிய மொழிகள் மற்றும் பல நாடுகளில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிறகு ஜெமினி நானோ ஆனது பிக்சல் 8 ப்ரோவில் வரவுள்ளது. இது ஜெமினி ஏஐ முதல் ஸ்மார்ட்ஃபோன் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஆகும். ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய ஏஐ அம்சங்களை இயக்குகிறது.ஜெமினி அல்ட்ரா ஆனது 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில, பார்ட்டில் உட்புகுத்தி பார்டு அட்வான்ஸ் வெளியிடப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் கூகுள் சர்ச், குரோம் போன்ற கூகுள் பயன்பாடுகளில் ஜெமினி ஏஐ-யின் சேவைக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெமினி எஐ 1.0 ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-4 ஐ விட அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
AIgemini 1.0Googlegpt4
Advertisement
Next Article