தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கூகுள் மேப்ஸூக்கு டாட்டா- சொந்த மேப்களை பயன்படுத்தும் ஓலா கேப்ஸ்!

06:26 PM Jul 07, 2024 IST | admin
Advertisement

ள்ளங்கை போனில் உலகமே அடங்கிவிட்ட விட்ட இந்த காலகட்டத்தில், வழி தெரியாத புதிய இடங்களுக்கு செல்வது என்பது இப்போது எளிதாகி விட்டது. கூகுள் மேப்ஸ் உதவியால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வழி தெரியாமல் தவிக்க வேண்டியதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி நினைத்த இடங்களுக்கு செல்கிறார்கள். ஆனாலும் கூட கூகுள் மேப்ஸ் சில நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் கூகுள் மேப்ஸ் செயலியை சரியாக பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி சிக்கிக் கொண்ட நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று இருக்கின்றன. சமீபத்தில் கேரளாவில் கார் ஒன்று ஆற்றில் சிக்கிக் கொண்டது நினைவில் இருக்கலாம்.சாதாரண மக்கள் கூகுள் மேப்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் ஓலா போன்ற நிறுவனங்கள் கூகுள் மேப்ஸின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸை (ஏபிஐ) பயன்படுத்துகின்றன, அதற்காக அவர்கள் பணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் ஓலா நிறுவனம் பயணங்களில் வழிகாட்டியாக கூகுள் மேம்ப்பை பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது அதிலிருந்து ஓலா மேப்ஸ் முறைக்கு மாறுவதாக அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம் பாதைகளை வழிகாட்டும் கூகுள் மேப்பிற்கு பதிலாக, தனது சொந்த தொழில் நுட்பமான ஓலா மேப் முறையை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த முடிவினை அறிவித்த ஓலா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால், இதன் மூலம் நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாயை சேமிக்கும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

ஆம்.. ஓலா கார் சேவை நிறுவனம், இனிமேல், Google வரைபடத்தைப் பயன்படுத்தாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அப்படி என்றால், இனிமேல் வாடகைக்கு கார் எடுக்கும்போது, வரைபட சேவைகள் எப்படி செயல்படும்? அதற்கான முன்னேற்பாடுகளை முடித்துவிட்ட ஓலா, இதுதொடர்பான அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று, ( 2024 ஜூலை 5) வெளியிட்டது. சொந்த வரைபடத்தை இனிமேல் பயன்படுத்தும் விதமாக, ஓலா கேப்ஸ் அதனை அறிமுகப்படுத்தியுள்ளது.ஓலா நிறுவனம், தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது. அதற்கு ஓலா மேப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் இந்த தகவலை சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். "கூகுள் மேப்ஸிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி செலவழித்து வந்தோம். ஆனால் தற்போது எங்களுடைய சொந்த ஓலா வரைபடத்திற்கு மாறிவிட்டோம். இந்த செலவு இனிமேல் இல்லை!" என்று ஓலாவின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு, ஓலா தனது கிளவுட் உள்கட்டமைப்பை மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure) என்பதில் இருந்து மாற்றியது. இப்போது நிறுவனம் அதன் சொந்த சுற்றுச்சூழல் அமைப்பை இயக்கும் வகையிலான அதன் பெரிய மொழி மாதிரி (LLM) செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பல புதிய அம்சங்கள் ஓலா வரைபடத்தில் வரும் காலத்தில் இணைக்கப்படும் என்றும் பவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஸ்ட்ரீட் வியூ (Street View) 3D வரைபடங்கள், நியுட்ரியல் ரேடியன்ஸ் ஃபீல்ட்ஸ் (Neural Radiance Fields (NERFs) (NERFகள்), உட்புறப் படங்கள், ட்ரோன் வரைபடங்கள் என பல புதிய அம்சங்கள் சேரும்.புதிய ஓலா வரைபடத்தை உருவாக்க OpenStreetMap என்ற திறந்த மூல திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. OpenStreetMap உடன், Ola தனது சொந்த தரவையும் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்கள் கூகுள் மேப்ஸை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் ஓலா போன்ற நிறுவனங்கள் கூகுள் மேப்ஸின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸை (ஏபிஐ) பயன்படுத்துகின்றன, அதற்காக அவர்கள் பணம் செலுத்த வேண்டும். ஓலா தனது சொந்த வரைபடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த கட்டணச் செலவுகள் மிச்சப்படும். ஆனால், ஓலா தனது சொந்த வரைபடங்களை இயக்க சிறிது பணம் செலவழிக்க வேண்டும், ஆனால் அது கூகுளுக்கு செலுத்தும் கட்டணத்தைவிட குறைவானது..

ஓலாவின் சவாரி சேவை மற்றும் மின்சார வாகனங்களுக்கு மட்டும் ஓலா வரைபடங்கள் இருக்காது. உண்மையில், டெவலப்பர்கள் ஓலா வரைபடத்தின் API ஐயும் பயன்படுத்த முடியும். அதாவது பிற ஆப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் ஆப்ஸில் ஓலா வரைபடத்தைப் பயன்படுத்த முடியும். ஆனால் இதற்காக டெவலப்பர்கள் ஓலாவுக்கு பணம் செலுத்த வேண்டும். ஓலாவின் செயற்கையான கிளவுட் சிஸ்டம் மூலம் இந்தக் கட்டணம் செலுத்தப்படும்.

Tags :
CLOUD GOOGLE MAPSGoogleOlaOLA AUTOOLA CABSola mapsஓலாஓலா கார்ஓலா கேப்கூகுள் மேப்டிஜிட்டல்-மேப்பிங்
Advertisement
Next Article