For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கிரிக்கெட்டுக்கு டாட்டா - தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

05:28 PM Jun 02, 2024 IST | admin
கிரிக்கெட்டுக்கு டாட்டா   தினேஷ் கார்த்திக் அறிவிப்பு
Advertisement

மிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். தனது 19வது வயதிலேயே இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியவர் அனைத்து வித கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான  தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த 2022-ம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.பின்னர் தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரில் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறியது.அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்தை வலம்வந்து ரசிகர்களின் பிரியாவிடையை ஏற்றுக்கொண்டார்.

Advertisement

இந்த நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த சில நாட்களாக நான் பெற்ற அன்பும் ஆதரவும் அளவிட முடியாதவை. இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நான் நிறைய யோசித்த பின்னர் கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்துள்ளேன். தற்போது அதிகாரபூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன்.

எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.

என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.விளையாட்டை பின்பற்றும் ரசிகர்களுக்கும், ஃபாலோவர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்"என்று சொல்லி இருக்கிறார்..

Tags :
Advertisement