For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தங்கத்தின் தேவை இந்தியாவில் 8% அதிகரிப்பு - உலக தங்க கவுன்சில் தகவல்!

01:34 PM May 01, 2024 IST | admin
தங்கத்தின் தேவை  இந்தியாவில் 8  அதிகரிப்பு   உலக தங்க கவுன்சில் தகவல்
Advertisement

ர்வதேச அளவில் அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்திய மக்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. காலம் காலமாக இந்திய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தை ஒரு சொத்தாக மட்டுமல்லாமல் அந்தஸ்துக்கான பொருளாகவும் இந்திய மக்கள் பார்க்கின்றனர்.அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்திய மக்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது.

Advertisement

காலம் காலமாக இந்திய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தை ஒரு சொத்தாக மட்டுமல்லாமல் அந்தஸ்துக்கான பொருளாகவும் இந்திய மக்கள் பார்க்கின்றனர்.இந்தியாவில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கியில் தங்க கொள்முதல் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் 19 டன்களுக்கு மேல் கடந்துள்ளதாக தகவல்.

Advertisement

இந்தியாவில் உள்ள மக்கள் நகைகளாகவும் தங்க காசுக்காகவும் சேர்த்து வைக்கின்ற தங்கத்தின் அளவு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 70% இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக தங்கம் கையிருப்பில் சுமார் 15 சதவீதமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கமானது ஒரு ஆடம்பரமான பொருள் என்ற அளவில் மட்டும் இல்லாமல் எப்போதும் பாதுகாப்பான சேமிப்பு கருவி என்ற அளவிலும் இதன் பயன்பாடு வளர்ந்துள்ளது.

இவ்வாறு தங்கத்தை சேமிப்பாக வைத்திருக்கும் தங்கத்தின் அளவு பணத்தின் அளவு எவ்வளவு என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் CENTRAL BOARD OF DIRECT TAXES ( CBDT) வரையறை வழங்கியுள்ளது.இதன்படி ஒரு வீட்டில் திருமணமான பெண்கள் 500 கிராம் (62.5 சவரன்)அளவிலும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் (31.25 சவரன்) அளவிலும், ஆண்கள் 100 கிராம் (12.5 சவரன்) அளவில் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த அளவைக் காட்டிலும் அதிகமான தங்கத்தை வைத்து இருந்தால் அது சட்ட விரோதமாகும் என்று சொல்லி இருப்பதை இந்தியர்கள் எவரும் பொருட்படுத்துவதில்லை.

இந்நிலையில்தான் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள விவர குறிப்பில், இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அண்மையில் எட்டியது. இருந்தும் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு காலமான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தங்க முதலீடு மற்றும் ஆபரணம் என நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் தங்கத்தின் தேவை 136.6 டன்களை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 126.3 டன்களாக தங்கத்தின் தேவை நாட்டில் இருந்துள்ளது. நகர பகுதிகளுக்கு நிகராக கிராமங்களிலும் தங்கத்தின் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவையில் பெரிய அளவில் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவது இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல ரிசர்வ் வங்கி நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் 19 டன் தங்கத்தை கொள்முதல் செய்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement